Showing posts with label திருவேங்கடம் வேலுப்பிள்ளை. Show all posts
Showing posts with label திருவேங்கடம் வேலுப்பிள்ளை. Show all posts

Thursday, January 7, 2010

வேலுப்பிள்ளையின் பூதவுடலை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள மகள் கோரிக்கை

உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதுடன் இயற்கை மரணம் எனத் தெரிவிக்கபட்டாலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமக்கு கருத்து தெரிவிக்கையில்,

"விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடலை கனடாவிலுள்ள அவரது மளிடமோ,டென்மார்க்கிலுள்ள அவரது மனிடமோ அல்லது இந்தியாவிலுள்ள அவரது மகளிடமோ அனுப்புவது சாத்தியமற்றது.

இந்நிலையில் கடாவிலுள்ள அவரது மகள் என்னைத் தொடர்பு கொண்டார். அவரிடம் நான் தெரிவித்தேன் கனடாவிலுள்ள இலங்கை துணை தூதரகத்தை தொடர்புகொண்டு, இலங்கையிலுள்ள எமது உறவினர் சிவாஜிலிங்கத்திடம் பூதவுடலை கையளிக்குமாறும், இதற்கு நாம் அனுமதி தருவதாகவும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதனையடுத்து துணைத்தூதரகம் விடுக்கும் அறிவுறுத்தலுக்கமைய, அரச தரப்புடன் கலந்தாலோசித்து அனுமதி பெற்று , நான் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் மற்றும் அவரது மனைவியை அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இறுதிக்கிரியைகளை நடத்துவேன்.

அதேவேளை அவரது மனைவி ஒரு பாரிசவாத நோயாளி. எனவே அரசு அனுமதி வழங்கு ம் பட்சத்தில் அவரை இந்தியாவிலுள்ள அவரதி மகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். இந்தியா அனுமதி மறுக்குமாயின் கனடாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பேன்.அதுவரையில் அவர் கொழும்பில் தங்குவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசுடன் கதைத்து ஏற்படுத்திக் கொடுப்பேன்.இது குறித்து உரிய தரப்பு அதிகாரிகள், தூதுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.



விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தை மரணம்



விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இன்று மரணமடைந்ததாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடன் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரத் மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவ்ர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.

Wednesday, January 6, 2010

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா?

கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது.



முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம்.
இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர்.
இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம். சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம்.
மேல்நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் “புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம்.
  1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால்,  உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா?
  2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா?
  3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம்  அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா?
  4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா?
பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது. அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா?; என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும்,  அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும். எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘BIAFRA’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தௌ;ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்.
நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம். இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள்.
இலங்கையின் நிலைமை:
ஈழத்தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை. ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை. காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப்புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட  பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது. 25,000 க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்” என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜே வார்த்தை ஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார். எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம்.
விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால், இலங்கை மட்டுமே ஓர் நிர்பந்தத்திற்குள் தள்ளப்படவில்லை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அடிப்படையில், தமிழீழம் அமைக்கும் கொள்கைக்கு எதிராகவே இருந்து வருவதை நாம் அறிவோம். இலங்கையில் தமிழீழம் உருவானால், அது தமிழ் நாட்டில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் என்ற தேவையற்ற பயம் இதற்கு ஒருகாரணமாய் இருந்திருக்கலாம். இந்திரா பிரதமராக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேச விடுதலைக்கு உதவியபோது,  அதே வங்கமொழி பேசும் மக்களை உள்ளடக்கியதும், வங்கதேசம் பிரிவதற்கு மிகவும் உதவியாக இருந்த இந்தியநாட்டின் ஒரு மாநிலமாகவும் இருந்த மேற்குவங்கம் தனிநாடாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும் தமிழ்நாட்டில், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என தனித்தமிழ்நாடு கோரிய கட்சிகள், தடைச்சட்டம் வந்ததும்,  1962 களிலேயே திராவிடநாடு கோரிக்கையை சுலபமாக கைவிட்டுவிட்டனர். அதன்பின்னர், அழகு தமிழிழ், மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! என்று முழங்கிய போதிலும், திராவிடக் கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டாட்சிக்குப் பதிலாக கூட்டணி ஆட்சியில் பங்குமட்டுமே பெறமுடிந்தது.
ஆரம்பக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையானது, குறுகிய கண்ணோட்டங்கள் கொண்ட தற்போதைய நிலைப்பாடு போல், எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இராணுவ நிலைப்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்துவந்தது. இதனால் முக்கிய கேந்திர இராணுவக் கட்டுமானங்களை, சீனா, பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால், தென்னிந்தியாவில் பெங்களுரில் நிறுவியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில், சோனியா அம்மையாரின் கண்கானிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்திய அரசாங்கமோ, சீனா, இந்தியாவின் வாசற்படிவரை வந்து நிற்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா அம்மையாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளை இலங்கையில் அழிப்பதில்தான் எல்லாக் கொள்கையிலும் முதன்மைபெற வேண்டிய கொள்கைபோல் அமைந்தது எனக்கூறின் அது மிகையாகாது. ஏதோவொரு வகையில், சீனாவிற்கு தலைசாய்க்கும் இலங்கையரசை காலப்போக்கில் தன்வசமாக்கலாம் என்றவொரு அசட்டு நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்துவருகின்றது என்றுதான் கூறவேண்டும். இலங்கையின் எல்லா எல்லைகளிலும் (கச்சைத்தீவிலும் கூட) சீனா நுழைந்ததை இந்தியாவால் விமர்சிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை உருவாகிவிட்டதே தற்போதைய அதிர்ச்சிகலந்த உண்மை. சீனாவின் இத்தகைய ஆதிக்கம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய சமுத்திரத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட பல புத்திசீவிகளின் புத்திமதிகளைக்கூட கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமையவில்லை. ‘எதிரிக்கு எதிரி தனது நண்பன்’ என்கிற வட்டார வார்த்தைக்கிணங்க, புலிகளுக்கு எதிராக, இலங்கையை ஆதரிப்பதில் மட்;டுமே, இந்திய அரசின் நாட்டம் சென்றது. “தன்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்போதும்” என இந்தியா கருதி வருவது மட்டுமன்றி சீனாவிலும் பார்க்க இலங்கையிடம் கூடியநட்பு வைத்தால் எல்லா பிரச்சினைகளும் தானாக தீர்ந்துவிடும் என இந்தியா நம்பி வருவதே இந்தியா செய்துவரும் வரலாற்றுப் பிழையாகும். இலங்கையை, சரித்திர ரீதியாக நாம் பார்த்தோமானால், அது ஓருபோதும், இந்தியாவை தனது நட்பு நாடாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சீன-இந்தியப் போராக இருந்தாலும் சரி அல்லது இந்தியா-பாக்கிஸ்தான் போராக இருந்தாலும் சரி அவற்றில் இலங்கையின் ஆதரவு நிலை என்பது இந்தியாவிற்கெதிராகவே அமைந்திருந்தது இதனை எடுத்துக்காட்டும். இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு கைப்பற்றியபோதே, இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகள், சிங்கள மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது. பின்னாளில் உருவான ஜே.வி.பி இயக்கம், இப்பகை உணர்வினை சிங்கள மக்களிடையே மேலும் வளர்த்ததை ஈழத்தமிழ் உறவுகள் நன்கறிவார்கள்..
இராஜிவ்காந்தியை ஒரு கடைநிலை இராணுவத்தினன் அடிக்க முற்பட்டதற்கும் இது அடிப்படைக் காரணம் எனலாம். இந்திய பிரதமரை அவமானப்படுத்த முயன்ற ஒருவனை தண்டிப்பதற்குப் பதில், இலங்கை அரசு, அவனுக்கு, அதன் பின்பு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றுகூட வதந்திகள் பரவின. இப்படியாக இந்தியாவிற்கு எதிராகவே காலங்காலமாக நடந்துவரும் இலங்கையின் நட்பை, இந்தியா எதிர்பார்ப்பது பகற்கனவாகலாம் என பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, மேற்கூறியவற்றை நாம் உற்றுநோக்கினோமானால், புலிகளை துரத்தும் வேட்டையில், இந்தியாவும் இலங்கையும் தமது சொந்தப் பாதுகாப்பு வேலிகளைத் தாமே மேய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை, உணரலாம்.
முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்தில் சாதகமேனும் விளைந்திருக்குமா எனப் பார்த்தால், சர்வதேச சமாதானத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடைமுறைகளும் அவற்றின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளையும் சற்று உற்று நோக்குவோம்.
  1. சர்வதேச சமூகம், தற்போது, விழிப்படைந்து மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடக்கின்றன என ஒவ்வொருவராக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு அதை   நிரூபித்து இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குச் சாட்சிகளைச் சேர்ப்பதிலும் ஆவலாக இருக்கின்றனர். இதன்பொருட்டு அரசியல் பிரச்சாரங்களை செய்வதோடு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்பாளர்கள், தனிப்பட்ட மக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கக்கூடிய சாட்சிகளையும் சேகரிக்கின்றனர்.
  2. இனப்படுகொலை தடுப்பு அமைப்புகளும் தற்போது ஊக்கத்துடன் செயல்களில் இறங்க முற்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை (உதாரணமாக மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்தமை, யாழ்பொதுநூல் நிலையத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் எரித்தமை, கல்விநிலையம், மருத்துவமனைகளை தாக்கியழித்தமை) வரிசைப்படுத்தி, இலங்கை அரசை குற்றக்கூண்டில் நிறுத்தும் பணிகளை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த தொடங்கியுள்ளனர்.
  3. 100,000 மேல் அப்பாவி பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நாம் முறையே வெளிக்கொணர்ந்து நிருபிக்கும் பட்ஜத்தில், இச்சம்பவம் ஐ.நா.வின் சட்டப்பிரகாரம் நமக்கு சட்டமூலமாக இலங்கைத் தீவினில் இருந்து பிரிந்து தமிழிழம் அமைக்க வலுச் சேர்க்கும் என்பது நிச்சயம்.
  4. இலங்கையில், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில், ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்திய பாதுகாப்பானது என வரையறுக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறல் செயல்களை புரிந்த இலங்கையை எந்தவிதத்திலேயும் கண்டிக்கத் தவறிய ஐ.நா- வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் மற்றும் அவரது ஆலோசகர் நம்பியார் ஆகியோர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எண்ணம் சர்வதேச சமூகத்தினரிடையே தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.
  5. ஐரோப்பாவில் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
  6. இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல்,  மேற்கு உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஓர் சிறிய இராஜதந்திர விரிசலைக்கூட முள்ளிவாய்க்கால் போர் ஏற்படுத்தியது எனக் கூறலாம். 2011-ல் நடக்கவிருக்கும் பொதுநல வாய (Common Wealth)நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு 45 நாடுகளின் ஆதரவைத் திரட்டிய இந்தியா, டிரினிடாடில் நடந்த பொதுநல வாய பிரதமரின் மாநாட்டில், வெற்றிபெற இயலவில்லை. இதனால், இந்தியா ஒரு பாரிய இராஜதந்திர பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. காரணம் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை ஓர் போர்க் குற்றம் நடத்திய நாடு என்ற வகையில் இம்மாநாட்டை அங்கு நடத்த முடியாது என உறுதியாகவும் கடுமையாகவும் ஆட்சேபித்தனர். இதனால் இம்மாநாடு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் இடைவிடாத அழுத்தத்தினால் விளைந்த பலன்களில் ஒன்று எனக் கூறலாம்.
  7. இந்தியா, இலங்கையின் அரசியலில் தலையிட்டதால் அடைந்த பின்னடைவு மேற்கூறிய பிரச்சனையுடன் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த வகையில், இந்தியாவும் ஒரு காரணகர்த்தா ஆகலாம் என்ற இன்னொரு குற்றப்பத்திரிகையும் உலகநாடுகளிடமிருந்து பெறவேண்டிவருமோ என அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்பிரச்சினை உலக அரசியல் அரங்கில் வெளிக்கொணரப்பட்டால், இந்திய அரசுக்கு ஒரு இராஜதந்திர பின்னடைவையும் அல்லாது அத்தோடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றின் அந்திமத்தையும் உருவாக்கக்கூடும். எனினும், இம்முயற்சியின் பெறுபேறு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடத்தும் மற்றும் தமிழ் நாட்டு மக்களிடத்தும் தங்கி உள்ளது.
  8. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் அமைக்கும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. “புலிகள் அழிந்து விட்டார்கள்” என சிறிலங்கா அரசே கொக்கரிக்கும் நிலையில், இனிமேல் வெளிநாட்டு அரசுகள் “பயங்கரவாதம்” எனும் வாதத்தை தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழீழம் கோரும் அமைப்புகள் மீதோ கொண்டுவர முடியாது. அத்தோடு மனித உரிமை மீறல்களையும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும் ஓர் அரசின்கீழ் அல்லது அரசுடன் தமிழ் மக்கள் இனிமேலும் ஒருங்கிணைந்து வாழ முடியாது என்பதும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது உலகில் ஒரு பண்பாகக் கடைபிடிக்கும் நாளில், இன்று சிங்கள இனவெறி அரசானது இனஅழிப்புக் கொள்கையின் ஒரு திட்டமாக மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்களால் தகர்த்து எறிந்திருப்பதிலிருந்து  ஐயமின்றி நிருபணம் ஆகிவிட்டது என்று, கடல்கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஜனநாயக வழியில் தமது தமிழீழ இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழீழம் ஒன்றே தமது தீர்க்கமான முடிவு என (1976-ல் முன்மொழியப்பட்டு 1977 இலங்கைப் பொதுத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்) உலகத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றனர். இன்று பிரான்சு, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு) மூலம் 99மூ தமது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளனர். பிரித்தானியா, ஜெர்மனி உட்பட ஏனைய நாடுகளும் இதே வழியில் பின்செல்ல அணிவகுத்து நிற்கின்றன. “ஜனநாயக வழியை பின்பற்ற வேண்டும்” எனக் கொக்கரிக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இந்நடவடிக்கை ஓர் கண்திறப்பாக அமையும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள்மீது தரங்குறைந்த அரைகுறைத் தீர்வுகளை திணிக்க யோசிக்கும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடவடிக்கை ஒரு சம்மட்டி அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேற்பட்ட கருத்துகளை நோக்கின், முள்ளிவாய்க்கால் போரில் தமிழினத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என ஓருவர் கருதினாலும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய மனித இழப்புக்களையும், 300,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலிகளின்பின் பட்ட வதைகளையும், அவலங்களையும்,  என்றும் எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது கசப்பான உண்மை. எந்தப் போரிலும் மனித உயிரிழப்பு ஓர் தடுக்க முடியாத அம்சம் என சிலர் ஆறதல் அடையக்கூடும். ஆனாலும் இன்னும் இராணுவச் சித்திரவதைக்குள் உட்பட்டிருக்கும் பல்லாயிரம் போராளிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய பிரச்சனையல்ல.
எனவே, ஈழத்தமிழ் உறவுகள் மேற்கூறிய பிரச்சனைகளை ஆராய்ந்து உணர்ச்சிவசப்படாத வகையில் ஓர் அமைதியான முடிவுக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். இதை எழுதும்போது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி நினைவிற்கு வருகின்றது  “every cloud has a silver lining” அதாவது எந்த கருமேகத்தையும் ஒரு வெள்ளி மின்னல்கீறு சூழ்ந்து இருக்கும் என்பதே அதன் விளக்கமாகும்.
- பேராசிரியர் தீரன்
இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

Tuesday, January 5, 2010

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது

சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது டி.பி.எஸ். ஜெயராஜ் கூறுகிறார்

சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய படையணிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசிநிலப்பகுதியை முற்றாக சுற்றிவளைத்து முற்றுகைக்குள் கொண்டுவந்தவுடன், விடுதலைப்புலிகளின் தலைமை முக்கிய திட்டம் ஒன்றை வகுத்தது. அதன்படி, விடுதலைப்புலிகளின் ஒரு அணி இராணுவத்தினருக்கு எதிரான கடைசி நேர இழப்புக்களை கொடுக்கும் தாக்குதல்களை வழங்குவது என்றும் அப்போது இன்னொரு அணி ஊடறுப்பு ஒன்றை மேற்கொண்டு முற்றுகைக்குள்ளிருந்து வெளியேறுவது என்றும் காயமடைந்த போராளிகள் மற்றும் அரசியல்துறையினர் உள்ளடக்கிய மற்றைய அணி இராணுவத்தினரிடம் சரணடைவது என்றும் இந்த திட்டம் வகுக்கப்பட்டது.

இதன்படி, சரணடைதல் தொடர்பான விடயத்தை விடுதலைப்புலிகள் அரசியல்துறைபொறுப்பாளர் பா.நடேசன் மேற்கொண்டார். சரணடைவது தொடர்பான நடைமுறையை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு பல்வேறு தரப்புக்களுடனும் அவர் தொடர்புகொண்டு பேசினார். ஐரோப்பிய நாடுகளின் இரண்டு அமைச்சர்கள், கொழும்பிலிருந்த மேற்குலக நாடுகளின் மூன்றின் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு உயரதிகாரிகள், பிரிட்டன் ஊடகவியலாளர் ஒருவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஆகியோருடன் தொடர்ச்சியாக செய்மதி தொலைபேசியில் பேச்சுக்களை நடத்தினார்.

மே 18 ஆம் திகதி அதிகாலை 6.30 மணியளவில் நடேசனை தொடர்புகொண்ட சந்திரகாந்தன் எம்.பி. - சரணடையும் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசு உத்தரவாதமளித்திருப்பதாகவும் அதனால் சரணடையும்படியும் தான் மாலை வந்து சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்குபின்னர், மேற்குலக நாடொன்றிலுள்ள தனது நண்பருடன் பேசிய நடேசன், தமக்கு இந்த சரணடைதல் விடயத்தில் சிறிலங்கா அரசின் மீதோ இராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்றும் காயமடைந்துள்ள போராளிகள் மற்றும் மக்களை காப்பாற்றுவதற்காக இந்த முடிவை எடுப்பதாகவும் சரணடைவதிலும்விட நஞ்சருந்தி சாவது மேல் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின்னர், சரணடையும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிரகாரம், நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் 10 முதல் 15 பேர் வரையிலானோர் முன்னே வெள்ளைக்கொடியை ஏந்தி செல்வது என்றும் அவர்களுக்கு பின்னால் குறிப்பிட்ட தூரத்துக்கு பின்னால் தளபதி ரமேஷ் மற்றும் இளங்கோ தலைமையில் 30 முதல் 40 வரையிலானோர் வெள்ளைக்கொடியுடன் நடந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தின் மனிதநேயம் அறவே இல்லாத 59 ஆவது டிவிஷன் படையணியைவிட 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதற்கே விடுதலைப்புலிகள் விரும்பினர். அதற்கேற்ப தாம் 58 ஆவது டிவிஷன் படையணியிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால், சரணடைவது தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் சரணடையும் இடமாக தீர்மானிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் 59 ஆவது டிவிஷன் படையணியின் தளபதி பிரசன்ன டி சிலவா, தனது படையணியின் நான்கு குழுவினரை நகர்த்தினார். 59 ஆவது டிவிஷன் படையணியின் கோல்வ் பிரிவு கப்டன் சமிந்த குணசேகர தலைமையிலும் ரோமியோ பிரிவு கப்டன் கவிந்த அபயவர்த்தன தலைமையிலும் எக்கோ பிரிவு கப்டன் கோசல விஜயக்கோன் தலைமையிலும் டெல்டா பிரிவு கப்டன் லசந்த ரட்ணசேகர தலைமையிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோல்வ் மற்றும் ரோமியோ பிரிவுகளுக்கு மேஜர் மகிந்த ரணசிங்கவும் எக்கோ மற்றும் டெல்டா பிரிவுக்கு மேஜர் விபுலதிலக்கவும் இந்த படைப்பிரிவுகளின் கூட்டுப்பொறுப்பு கேணல் அத்துல கொடிப்புலியிடமும் வழங்கப்பட்டது.

அப்போது, நடேசன்,புலித்தேவன் அடங்கிய முதல் தொகுதியினர் (10 - 15 பேர்) கைகளில் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னால், குறிப்பிட்ட தூரத்தில் இரண்டாவது தொகுதியினர் ரமேஷ், இளங்கோ தலைமையில் (40௪5 பேர்) சரணடைவதற்கு வந்துகொண்டிருந்தனர்.

நடேசனது தொகுதியினரை சுற்றிவளைத்த படையினர் அவர்களை தமது காவலரண் பகுதிக்கு அழைத்து சென்ற அதேவேளை, ரமேஷ் தலைமையிலானவர்களை சுமார் 100 மீற்றர் தொலைவில் வெள்ளைக்கொடியை உயர்த்திப்பிடித்தவண்ணம் நிற்குமாறு உத்தரவிட்டனர்.

காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் தரையில் முழங்காலில் நிற்கமாறு பணிக்கப்பட்டனர். அதன்பின்னர், சிங்களத்தில் தகாத வார்த்தைகளால் நடேசனை திட்டிய இராணுவத்தினர், அவர்களை சுடுவதற்கு தயாராகினர். சிங்களப்பெண்ணான நடேசனின் மனைவிக்கு அது விளங்கிவிட்டது. உடனே, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தனது கணவரை சுடவேண்டாம் என்று அழுதுகுழறியபடி எழுந்துசென்று கணவனுக்கு அருகில் செல்ல, கண்ணிமைக்கும் நேரத்தில் நடேசனும் அவரது மனைவியும் புலித்தேவனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனையவர்களையும் சுடுவதற்கு முயற்சித்தபோது, அங்குநின்றுகொண்டிருந்த உயரதிகாரிகள் சுடுவதை நிறுத்தும்படி கூறியதை அடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இவ்வேளையில், காவலரண் பகுதிக்குள் கூட்டிச்செல்லப்பட்ட நடேசன் குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சத்தத்தை கேள்விப்பட்ட ரமேஷ் குழுவினர் உடனடியாக தாம் வந்த வழியாக திரும்பி ஓடத்தொடங்கியுள்ளனர். அவர்களை நிற்கும்படி கத்தியபடி கலைத்துச்சென்ற படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஓடும்போது ஒருவரில் மோதி ஒருவர் விழுந்து தொடர்ந்து ஓட முடியாமல் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விழுந்துவிட்டனர். இதனையடுத்து, கலைத்துச்சென்ற படையினர் அவர்களை அந்த இடத்திலேயே சரமாரியாக சுட்டும் கிரனேட் வீசியும் கொன்றுதள்ளியுள்ளனர். அந்தக்கூட்டத்திலிருந்து ஓருசிலர் மாத்திரம் படையினரால் வெளியே இழுத்தெடுக்கப்பட்டனர்.

இந்தப்படுகொலை படலம் போர் முடிவுற்றவேளையில் சிறிலங்கா இராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய கொடூரம். ஆனால், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பேச்சுக்களும் நடத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்க்கப்பட்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னமும் பதில் இல்லாத கேள்வியாகவே உள்ளது.

அப்போது சீனாவிலிருந்த தன்னை கேட்காமல் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடையும் விடயத்தில் முடிவெடுத்துவிட்டார் என்ற சீற்றத்தில் பொன்சேகா சீனாவிலிருந்து சில விசேட கட்டளைகளை வழங்கி இந்த சம்பவம் நடைபெற்றதா?

அல்லது

இருதரப்புக்கள் மத்தியிலும் தொடர்பாடல் பிரச்சினையால் இந்த சம்பவம் இடம்பெற்றதா?

அல்லது

உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவு சரியாக களத்தில் நிறைவேற்றப்படாததால் இந்த சம்பவம் இடம்பெற்றதா - என்று எதுவும் புரியாத விடயமாகவே இது காணப்படுகிறது.

ஆனால், சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்ட இந்த படுகொலை விடயத்தை சிறிலங்கா அரசு இலகுவில் மறைத்துவிடமுடியாது. இந்த விடயம் இலகுவாக மறைக்க கூடியளவுக்கு சிறிய சம்பவம் அல்ல.

கொடூரமான மனிதப்பேரழிவை பற்றி எழப்போகின்ற கரிசனைகளையும் அதனையொட்டி எழுப்பப்படபோகின்ற விசாரணைக்கான கோரிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருபோதும் தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

அவ்வாறான விசாரணைகள் வருகின்றபோது, தற்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவை பாதுகாத்துவரும் ”சிறிலங்காவின் நண்பர்கள்” என சொல்லப்படுவோர், நெருக்கடியான நிலையொன்றுக்குள் தள்ளப்படுவார்கள்.

சிங்களப் பாடகி சஹோலிக்கும் மகிந்தவுக்கும் என்ன தொடர்பு: ஒரு ரிப்போர்ட்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போற்றும் வகையில் இயற்றப்பட்ட வணக்கம் மாமன்னரே ! என்ற சிங்களப் பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி கமகே இரகசியமான இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இவர் ஜனாதிபதியை வாழ்த்திப் பாடிய நாள்முதல் மகிந்த இவருடன் சில ரகசிய உறவுகளைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது. இப் பாடகி மீது மகிந்த விசேட அக்கறை செலுத்தி வந்ததும், அவர் தனது செல் தொலைபேசி இலக்கதை கொடுத்ததும் ஜனாதிபதியின் பாரியாருக்குத் தெரியவந்துள்ளதாம்.

இதனையடுத்து ஷிராந்தி ராஜபக்ஷ ஆத்திரமடைய, ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் இந்தப் பாடகிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவிற்குப் பயந்து இரகசியமான இடமொன்றில் இப் பாடகி மறைந்து வாழ்வதாக அறியப்படுகிறது.

பாடகி சஹோலி கமகே இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பில் இருப்பதாகவும், இவரை நாமல் ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் கூறப்படுகிறது. குறித்த பாடகியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என நாமல் ராஜபக்ஷவிற்கு அறிவித்திருக்கும் ஷிராந்தி ராஜபக்ஷ, இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற விளம்பரத் தொடரில் அவரை இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, December 29, 2009

பழ.நெடுமாறன் அவர்களின் தம்பி பழ.கோமதி நாயகம் காலமானார்


உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்
அவர்களின் உடன் பிறந்த தம்பி பழ.கோமதிநாயகம்
இன்று காலையில் சென்னையில் உள்ள அவரது
இல்லத்தில் உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.

சென்னை மாம்பாக்கம் சாலையில் உள்ள பார்சன் அபார்ட்மெண்ட்டில் உள்ள வீட்டில் அவரது இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணிக்கு நடைபெறும்.

கோத்தபாய, சிறிலங்காவின் பாரிய வன்முறையாளர் என்கிறது “த கார்டியன்”

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே சிறிலங்காவின் பாரிய அடிப்படை மனித உரிமைகள் வன்முறையாளர் என த சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தில் பணியாற்றுகின்றவர் என்ற அடிப்படையில் அவர் மனித உரிமைகள், மனிதாபிமானம், சர்வதேச யுத்த சட்டங்கள் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சகோதரத்துவத்துக்காவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அவர் சிறிலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
கடந்த ஓரு தசாப்த காலமாக தாய்நாட்டையே பார்த்திராத கோத்தபாய, திடீரென களத்தில் இறக்கப்பட்டதன் விளைவாக மனிதாபிமானம் பாராமல் பல அப்பாவி உயிர்களை பலிகொடுக்க நேரிட்டது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமது மாமாவை பாதுகாப்பு செயலாளராக வைத்திருந்ததை போலவே மகிந்த ராஜபக்ஷவும் வைத்திருக்க முயற்சித்தார்.
எனினும் கோத்தபாய தமது யாருக்கும் அடங்காத இனத்துவேச வெறியுடன் செயற்பட்டு, எவ்வாறாயினும் தமது இலக்கை அடைய வேண்டும் என ஜனாதிபதியையும் கட்டுப்படுத்த ஆரம்பித்ததாக த கார்டியன் தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று கோத்தபாயவுக்கு பட்டம் வழங்கியமையையும் இந்த இணையத்தளம் விமர்சித்துள்ளது.
குறைந்த பட்சம் அனுருத்த ரத்வத்தையேனும் யுத்தகளத்தை பார்வையிட்டுள்ளார், எனினும் கோத்தபாய யுத்த களத்துக்கு செல்லாமல் பாரிய அரசியல் மற்றும் இராணுவ அதிகாரங்களை கையில் எடுத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு பட்டம் வழங்குவது எந்த அளவு பொருந்தும் என கேள்வி எழுந்துள்ளதாக த காடியன் தெரிவித்துள்ளது.

வன்னிப்போர் தமிழரை கொன்றது சிங்களவரை கொல்லாமல் கொல்கிறது


சிறீலங்கா சென்று திரும்பிய புலம் பெயர் தமிழர் கணிப்பு
கொத்துறொட்டி 450 ரூபா வாகனங்கள் விலை இரட்டிப்பு அதிகரிப்பு..
அமெரிக்கா ஈராக் மீது நடாத்திய வளைகுடா போரில் ஏறிய விலைகளை விட மோசமான விலையேற்றத்தால் இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நத்தார் விடுமுறையில் இலங்கை சென்று திரும்பும் புலம் பெயர் தமிழர் தெரிவிக்கிறார்கள். போரினால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நிவாரணமாவது கிடைக்கிறது. வெற்றி என்ற வெறும் வார்த்தை சோறு போடாது என்பதை சிங்களவரின் பசித்த வயிறுகள் உணரத் தொடங்கியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
புலிகளை அழித்துவிட்டால் சிங்களத் தீவில் பாலும் தேனும் ஓடும் என்று பேசிவந்த சிங்கள அரசியல் வாதிகள் கூட கற்பனை பண்ணாத ஒரு முடிவு வன்னிப் போர்க்களத்தில் ஏற்பட்டதால் கதி கலங்கியுள்ளனர். புலிகளை சொல்லிக்கொண்டே சிங்களவரின் வயிற்றில் ஈரத்துணியை போட்டுவந்த ஆட்சியாளர் இப்போது சிங்களவரின் வயிற்றுப்பசிக்கு பதில் சொல்ல வேண்டிய அபாயமான நிலை வந்திருக்கிறது. காலம் தாமதித்தால் வெள்ளம் தலைக்கு மேல் போய்விடும் என்று கருதியே அதிபர் தேர்தலை அவசரமாக நடாத்துகிறார்கள் என்கிறார்கள்.
கொத்து றொட்டி 450 ரூபா, சாதாரண மதிய உணவு 280 ரூபா, இரண்டு கறிகள் ஓடர் கொடுத்தால் 750 ரூபாவாகிவிடும். யாழ் – கொழும்பு, திருமலை – கொழும்பு என்று 2005 சமாதான காலத்தில் இருந்த மினிவான் சேவைகளுக்கான விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் விற்கும் சாதாரண தலை முழுகும் சாம்போ இங்குள்ள விலையிலேயே கொழும்பில் விற்கிறது. வாழ்க்கைச் செலவு 2005 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் மூன்று மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. வன்னிப்போருக்கு இலங்கை மக்கள் கொடுத்துள்ள பெரிய விலை இதுவாகும். அதிபர் தேர்தல் முடிந்ததும் உயரப் போகும் விலைகளே வன்னிப் போரினால் ஏற்பட்ட இழப்பிற்கான சுமையாக அமையப் போகிறது என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்ஷவின் பிரமாண்டமான கட்டவுட்டுக்கள் சிங்களப் பகுதி முழுவதும் அலங்கரிக்கின்றன. அதுபோல பிரமாண்டமான கட்டவுட்டுக்களை சரத்பொன்சேகாவினால் வைக்க முடியவில்லை. தமிழ் மக்களில் பலர் மகிந்த ராஜபக்ஷவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால் சிங்கள மக்களில் பலர் சரத்பொன்சேகாவே வெற்றி பெறுவார் என்கிறார்கள். எனினும் தேர்தல் முடிவுகள் சிறிய வித்தியாசமே காணப்படும். தேர்தல் முடிவுகளுக்கு பின் வரும் கலவரத்தில் தமிழ் மக்கள் அடிபட வாய்ப்பிருப்பதாக சிலர் கூறுகிறார்கள். புலிகளுக்கு பயந்து தமிழருக்கு அடிக்காமல் இருந்த காடையர்கள் இனி மறுபடியும் தாலியறுக்க புறப்படலாமென்று சிலர் மறைவாகக் கூறுகிறார்கள்.
வன்னிப் போர் பற்றியும் அங்கு நடந்தவைகள் பற்றியும் புலம் பெயர் நாடுகளில் ஊடகங்கள் போடும் கூச்சலைப்போல அங்கிருப்போர் கூச்சலிடவில்லை. போர் பற்றி அதிக அக்கறை காட்டாதது போலவே நடந்து கொள்கிறார்கள். பிள்ளைகளின் படிப்பை விருத்தி செய்வதில் மறுபடியும் தமிழ் பெற்றோர் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். மாதம் 12.000 ரூபா கட்டி தனியார் கல்வி நிலையங்களுக்கு போகும் கலாச்சாரம் மறுபடியும் களைகட்டிவிட்டது. இங்கிருந்து பிழைப்பு நடத்த இயலாது படித்து முடித்து வெளிநாடு போவதே சிறந்தது என்ற கருத்து நிலவுகிறது. நன்கு படித்த இளம் யுவதி ஒருவர் இங்கிலாந்தில் வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை பொருளாதார மந்தத்தில் சிக்குண்டிருக்கும் புலம் பெயர் தமிழரின் கரங்களை நம்பியிருப்பதால் பல தமிழர் சிங்களவரைவிட சிறப்பாக வாழ முடிகிறது. வெளிநாடுகளில் பணம் அனுப்ப ஆட்கள் இல்லாதவர் நிலை சாதாரண சிங்களக் குடியானவன் மோசமாகவே இருக்கிறது.
யாழ்ப்பாணம் போகும் வீதிகள் விரைவுச் சாலைகளாக திருத்தப்பட்டுவிட்டன. கிளிநொச்சியை தாண்டிப் போகும் வாகனங்கள் பாதுகாப்புடனேயே போகின்றன. வாகனங்களை நிறுத்த முடியாது. இராணுவம் ஓடும் அதேவேகத்தில் ஓடிச் செல்ல வேண்டும். அப்பகுதியில் இன்னமும் பிண வாடை வீசுவதாக சிலர் கூறுகிறார்கள். வன்னிக் குடியேற்றம் தாமதமாக இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். 50.000 பேர் புதைக்கப்படவில்லை ஓர் இலட்சத்திற்கும் மேல் புதைந்துள்ள பிரேதங்கள் உள்ள பகுதியாக உள்ளதாக சிலர் கூறுகிறார்கள். கண்ணி வெடிகளை விட இவைகளை தோண்டி எரிக்க அதிக காலமாகும். இப்போதே அங்கு மக்கள் போனால் சர்வதேச போர்க்குற்றத்திற்கு மண்டையோடுகள் கிடைத்துவிடும் என்ற அச்சம் நிலவுகிறதோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
அங்கு போவோருக்கு யாதொரு கெடுபிடியும் கிடையாது சமாதான காலத்தைவிட இயல்பாக உள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் லைப் மியூசிக்காக பாட்டுக்கச்சேரி களை கட்டுகிறதாகக் கூறுகிறார்கள். அங்கு நடக்கும் பொப்பிசைப் பாட்டில் பழைய எம்.எஸ்.பெர்ணாண்டோவின் தங்கக் கொடி சரி பண்ணுவேன் என்ற பாட்டு கேட்கிறதா என்றும் இனிப்போவோர் அவதானிக்க வேண்டும். வன்னியில் எடுத்த கொடிகளில் பல பித்தளையாக இருந்த கதையின் சோகம் அதில் தொனிக்க வாய்ப்பிருக்கிது. வன்னிப்போர் சிங்களவரை மட்டுமல்ல அங்குள்ள தமிழ் முஸ்லீம் மக்கள் உட்பட புலம் பெயர் தமிழரையும் பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளதையே காண முடிகிறது. ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த் தாக்கம் சமம் என்பார்கள் இப்போது அது தெரிய ஆரம்பித்துள்ளது. வன்னிப்போர் தமிழரை கொன்றது சிங்களவரை கொல்லாமல் கொல்கிறது என்கிறார்கள் அங்கு போய் வந்த பலர்.

Thursday, December 24, 2009

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! :பழ நெடுமாறன் உறுதி



பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன!

‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்’ என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

இந்நிலையில்தான், ‘பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்’ என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்பதாகக் கூறுகிறார்.

வருகிற 26, 27 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ‘வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!’ என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

‘பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?’

‘பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், ‘வெற்றி பெறுவோமோ… மாட்டோமோ…’ என்கிற பதற்றம் ராஜபக்சேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்புகளின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்சே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன்… துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.’

‘அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?’

‘அது இசைபிரியா என்கிற பெண் போராளியின் சடலம். ‘நிதர்சனம்’ புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்… களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் – நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்… இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசைப்பிரியா!’

‘பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?’

‘சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் ‘ரா’வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே… அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும்.

சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர்களுக்குத்தான் தெரியும்.

பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?’

‘பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?’

‘இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. ‘நான்தான் கொன்றேன்!’ என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், ‘நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?’ எனக் கேட்டார். ‘என்னை அடிச்சே அப்படியொரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க…’ எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.

தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத்திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.’

‘பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?’

‘அப்படியொரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ… அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது.

ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ… அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!’

‘பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?”

‘அப்படியொரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. ‘கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்’ என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது.

‘ரா’வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய… அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!’

‘பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?’

‘ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார்.

உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடியாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.

தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது.

இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்… ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.

சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய்தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற்காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது!

ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா… தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!’ என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.

அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம்.

‘இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு’ என்றார் வேதனையோடு.

(ஜூனியர் விகடன்)

புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்

2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வதந்திதான் என்று நாம் உத்திரவாதம் தான் கொடுக்க முடியுமா?
வன்னி மீதான போர் தீவிரப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அரசின் துணையோடு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மார்ச் மாதவாக்கில் நண்பர்கள் ஒரு மெயிலை எல்லோருக்கும் தட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். புலி எதிர்ப்பாளர்கள், சி.பி.எம் கட்சியைச் சார்ந்த தோழர்கள் இந்த மெயில்களை பெரும் கொண்டாட்டத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனுப்பிய அந்த மெயில் அப்படியே எனக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் இராணுவ, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த கோப்பை அப்படியே பி.டி.எப்ஃ, எம்.எம்.எஸ் பைலாக மாற்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் மெயிலைத் திறந்த உடன் அது நம் கணிப்பொறி திரையில் ஒரு மினி சினிமா மாதிரி வந்து வந்து மறையும்) அனுப்பியிருந்தார்கள். அந்த புகைப்படத் தொகுப்பு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.

பிரபாகரன் அவரது உறவுகளோடு அமர்ந்து உண்டு கொண்டிருப்பார். ஈழக் குழந்தைகளோ கையில் தட்டேந்தி உணவுக்காக நின்று கொண்டிருக்கும். (அதவாது பிரபாகரன் உணவருந்துகிற படம் பழையது. குழந்தை தட்டோடு நிற்பது இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டது) பிரபாகரன் நீச்சல் குளத்தில் அவரது மகனோடு நிற்பார். ஈழக் குழந்தைகளோ அம்மணக் குண்டிகளாய் குளத்தில் குளிக்கிறார்கள். துவாரகா பட்டம் பெறுகிற மாதிரி ஒரு படம், ஈழத்து மாணவிகளோ கையில் துப்பாக்கியோடு நிற்கிற படங்கள். இப்படியான ஒரு மெயில் பலரது மனதையும் மனக்கிலேசத்துக்கு ஆளாக்கியிருக்கக் கூடும். புலிகளின் அழிவைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் இந்த மெயிலைக் கொண்டாடியும் புலிகளைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் வேதனைப்பட்டும் இது குறித்து பேசிக் கொண்டார்கள். நான் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மொபைலில் வருகிற எஸ்,எம்.எஸ்களே ஒரு கட்டுரையைத் தீர்மானிக்கும் என்றால் நாம் ஏன் இது குறித்து எழுதக் கூடாது என்றுதான் இப்போது இதை எழுதுகிறேன்.
பிரபாகரன் குளித்த நீச்சல் குளம் சென்னை பாண்டிபஜாரில் பிளாட்பார்ம் கடையில் ரூபாய் நூற்றி ஐம்பது ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு செய்கிற திராணி உங்களுக்கு இருந்தால் ஒரு மினி நீச்சல் குளத்தை நம் வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொள்ளலாம். சொந்த வீடு இல்லாதவர்கள் கள்ளத்தனமாக வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என் குழந்தைக்கு ஒரு சின்ன நீச்சல் குளம் வாங்கியிருக்கிறேன். அதாவது நமது எதிர்கருத்து நண்பர்களின் அளவுகோலின்படி நான் பிரபாகரனுக்கு நிகரான ஒரு ஆடம்பரவாதி (பிரபாகரனின் மகள் துவாரகா மாலதி படையணியில் போரிட்டு களத்தில் மடிந்த பெண் போராளி என்பது உபரியான தகவல். தவிரவும் சார்ல்ஸ் ஆண்டனி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்தவர், துவாரகா டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதெல்லாம் நமது ஊடகங்களின் கட்டுக்கதை.) சரி பிரபாகரனை ஆடம்பரவாதியாக சித்தரித்து இவர்கள் அனுப்பியது போன்ற ஒரு மெயிலையோ புகைப்படத் தொகுப்பையோ உலகின் வேறு எந்த தலைவருக்குமே உருவாக்க முடியாதா, என்ன? பிடல் காஸ்ட்ரோவுக்கோ, ஜோதிபாசுவுக்கோ, காந்திக்கோ உருவாக்கி விட முடியாதா? ஜோதிபாசு காரில் போவது போன்று ஒரு படம், ஏழைப்பாட்டாளி ஒருவர் பொட்டல்வெளியில் செருப்பில்லாமல் நடந்து போவது போன்று ஓரு படம்; அவருக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஒரு படம்; ஏழைத் தொழிலாளி முறையான சிகிச்சையின்றி இறந்தது மாதிரியான ஒரு படம்; அனுப்ப முடியாதா என்ன?
போர்க்காலத்தில் இன்னும் என்னென்ன வதந்திகளை எல்லாம் இவர்கள் பரப்பினார்கள்? ‘பிரபாகரன் போர்ப் பகுதியில் இல்லை; மக்களை பலிகடவாக்கி விட்டு அவர் தூர தேசத்துக்கு தப்பி விட்டார்’’ என்றார்கள். அதுவும் பொய்யென்று ஆன பிறகு இப்போது சொல்கிறார்கள், “புலிகள் மக்களை மணல் மூட்டைகளாக்கி விட்டார்கள். மக்களைக் கொன்றது அவர்கள்தான்”. அதற்காக வாக்குமூலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ வதந்திகள்!! எல்லாவற்றையும் வதந்திகள் என்று விட்டு முடியுமா அல்லது புலிகள் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளில் ஒரு பாதி உண்மை என்று என்று எடுத்துக் கொள்வதா என்கிற தேடுதல் கூட இல்லாமல் - படுகொலை நிகழ்த்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசு குறித்து மௌனம் சாதித்து விட்டு, நாம் இனப்படுகொலைக்காக பேசும்போதெல்லாம் இவர்கள் புலிப்பாசிசம் என்றும் வன்னிப் புலிகள் என்றும் இனப்படுகொலைக்காக ஒலிக்கும் குரல்களை பலவீனப்படுத்துகிறார்கள். வதந்திகள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எல்லாமே வதந்திகள் என்று ஒதுக்குவதன் மூலம் நாம் ஒதுக்கித் தள்ள நினைப்பது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும்தான். நல்ல காலம் அதை தமிழகத்தில் யாரும் வெளியிடவில்லை. தமிழகத்தில் அது வெளியிடப்பட்டிருந்தால் புலிப் பிரச்சாரம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.
நான் பெரிதும் மதிக்கக் கூடிய பேராசிரியர் அ.மார்க்ஸ் ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் என்று ஒரு கட்டுரையை புதுவிசை இதழில் எழுதியிருந்ததையிட்டுதான் என் கருத்தை நான் பதிவு செய்ய நேர்ந்தது. எஸ்.எம்.எஸ். வதந்திகள் குறித்து எழுதியதில் இந்திய வீரர்கள் ஈழ மக்களைக் கொல்கிறார்கள்; இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள் என்று சொல்கிறார் மார்க்ஸ். உண்மையில் இதெல்லாம் வதந்திகள் மட்டும்தானா? இந்திய வீரர்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதில்லையா? ஆயுதங்களும் படைகளும் அனுப்பவில்லையா? சார்க் மாநாட்டுக்கு இந்தியத் தலைவர்கள் சென்றபோது இந்திய இராணுவம் கொழும்பு நகரத்தையே தங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையா? புலிகளின்  ஆயுதக் கப்பல்களை வழிமறித்து இந்தியக் கடற்படை தாக்கியழிக்கவில்லையா? தமிழகம் வழியாக இராணுவ டாங்கிகளும், வெடிப்பொருட்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த இந்தியா அனுப்பவில்லையா? அவைகள் மதுரை செக்போஸ்டில் சிக்கி இந்திய அழுத்தம் காரணமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவில்லையா? ஈரோடு வழியாக சரக்கு ரயில்களில் டாங்கிகள் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு செல்லவில்லையா?
இப்படி எவ்வளவோ கேட்க முடியும். எல்லாமே வதந்திகளல்ல. எல்லாமே உண்மைகளும் அல்ல. எளிய மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் உண்மையும் பொய்யும் கலந்தே கதைகள் உலவுகின்றன. அதிலுள்ள ஒரு பொய்யை எடுத்து அல்லது சில பொய்களை எடுத்து பல நூறு உண்மைகளை வதந்திகள் என்று நிறுவ முயல்வது ஏன்? இப்போது வெளிவந்திருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும் வதந்தி என்று கழித்துக் கட்ட நினைப்பதன் அரசியல் சிந்தனை என்ன? (தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ ஆதாரங்களை சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் போலியானது (வதந்தி) என்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் புலி எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் பெரும்பலானவர்களும் இந்த வீடீயோவை அப்படியே உல்டாவாக்கி கொல்வது புலிகள் என்றும் கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்)
மற்றபடி மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் தமிழக எழுத்தாளர்கள் குறித்த எபிசோட் ஒரு காமெடி பீஸ்தான். இந்த காமெடி பீஸை “யார் மனமும் புண்படாமல் போராடிய” கவிஞர்களின் ஒப்பாரிப் போராட்டத்தில் இருந்து நாம் கண்டு வருகிறோம். மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்? ஈழம் குறித்து ஆதரித்தோ எதிர்த்தோ எழுதாத சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலைகள் குறித்துப் பேசுகிற நம்மைப் பார்த்து 'படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என்கிறார்கள்.
ஐம்பதாயிரத்துக்கும் மேலதிகமாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு, முகாம்களில் இன்றும் கடத்திக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நியாயம் கேட்டால் படுகொலைகளைக் கொண்டாடாதீர்கள் என்று நம்மை கொலைகளைக் கொண்டாடுபவர்களாக சித்தரிக்கிறார்கள். இலங்கையின் பௌத்த மரபை பாசிசம் என்றால் அது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம் என்று அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். இலங்கையிலும், பர்மாவிலும் கடைபிடிக்கப்படுகிற பௌத்த தேரவாத மரபு பௌத்தத்தின் இறுக்கமான பாசிசத் தூய்மைத் தன்மை கொண்டது என்று நமது பௌத்த நண்பர்கள் சொல்கிறார்கள். இது குறித்து தனியே எழுத விரும்புவதால் இதில் இத்தோடு விடுவோம்.
பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது. பதிவு செய்து நியாயம் கேட்டவன் அந்த எட்டாயிரம் படுகொலைகளை கொண்டாடவா செய்தான் அல்லது அம்பேத்கர்தான் இனப்படுகொலை செய்யச் சொன்னாரா? பாசிசத்தை எவன் செய்தால் என்ன அது உலகு தழுவிய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பாசிசமாக இருந்தால் என்ன? பார்ப்பன இந்து மத வெறிப்பாசிசமாக இருந்தால் என்ன? தலிபான்களின் அடிப்படைவாத பாசிசமாக இருந்தால் என்ன? தேரவாத பௌத்த பாசிசமாக இருந்தால் என்ன? பாசிசத்தை அதன் பேரில் அழைத்து விட்டுப் போக வேண்டியதுதனே?
சுசீந்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுகன் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சின் இந்தக் கட்டுரையும் இங்குள்ள புலி ஆதரவாளர்களோடு ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் ஒன்றாக இணைத்து எல்லோருக்கும் ஒரே புலி முத்திரை குத்தி முடக்கும் கட்டுரைதான். இங்குள்ள புலிஆதரவாளர்களைச் சாடுகிற நோக்கில் போகிற போக்கில் அகிலன் கதிர்காமரை இடதுசாரி பாரம்பரியம் உள்ளவராக சித்தரிக்கிறார். சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தியை ‘புலிகளை விமர்சிக்கிறவர்கள்’ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். நான் சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கி விட்டதாக எழுதியதாக பதிவு செய்கிறார். நாகார்ஜூனனும், வளர்மதியும் புலிகளை ஆதரித்தார்களோ இல்லையோ நான் புலிகளை ஆதரித்தேன். ஆதரித்து விட்டு இன்றைக்கு இல்லை அய்யய்யோ எனக்குத் தெரியாதே என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகியிருக்கிறான். எனக்கு அந்தத் தேவைகள் இல்லை. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, ஒழுக்கக் கொலைகள், அரசியல் அற்ற தன்மை என்று புலிகள் செய்த எல்லா தவறுகள் மீதும் விமர்சனம் கொண்டே நான் ஆதரித்து வந்திருக்கிறேன். மற்றபடி மூன்று லட்சம் சிவிலியன்களை அவர்கள் பிணையக் கைதிகளாக்கினார்கள், மக்களை மணல் மூடைகளாக்கினார்கள் என்பதெல்லாம் எஸ்.,எம்.எஸ் வதந்திகளைப் போல பாதி வதந்திகள்தான். இது குறித்து வாக்குமூலம் என்கிற போர்க்கால வாக்குமூலங்களை பதிவு செய்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது வரும் போது ஈழத்தில் என்ன நடந்தது  என்பது வெளிப்படும் என்பதால் அது குறித்தும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.
மற்றபடி இலங்கை அரசிடம் பணம் வாங்கியது தொடர்பாக நான் கூசாமல் சொன்ன குற்றச்சாட்டு குறித்து,
அகிலன் கதிர்காமரை இடது சாரி பாரம்பரியம் உள்ளவராக பேரா.அ.மார்க்சுக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அகிலன் கதிர்காமர் இன்று ஒரு என்.ஜீ.ஓ. ஆகவே அவர் மனித உரிமை சக்திகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல. சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் என்னும் தன்னார்வக்குழுவை கனடாவை மையமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் அகிலன் கதிர்காமர். சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. மார்க்சுக்குத் தெரியும் என நினைக்கிறேன். போருக்குப் பிந்தைய இலங்கை அரசின் நிதி இரண்டு விஷயங்களுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது. ஒன்று இராணுவத்துக்கு இன்னொன்று புலத்திலும், தமிழகத்திலும் நிலவும் புலி ஆதரவை சிதைக்கும் ராஜதந்திர நடவடிக்கைக்கு. இதற்காக அவர்கள் தன்னார்வக் குழுக்களையே சார்ந்திருக்கிறார்கள். அதாவது ஒரு பக்கம் முகாம்களுக்குள் தன்னார்வக்குழுக்களை அனுமதிக்காமல் தடுத்து விட்டு இலங்கைக்கு வெளியே தன்னார்வக் குழுக்களை வைத்து ஈழம், புலி ஆதரவு, எதிர்ப்பியங்களை நசுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு.

அந்த வகையில்தான் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஜெர்மன் சுசீந்திரனால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நிதி உதவி செய்தது ஒரு தன்னார்வக்குழு. இந்த தன்னார்வக் குழுவின் நிதி வாசல் இலங்கை அரசு. சுமார் அறுபது லட்சம் ரூபாய் இந்தக் கருத்தரங்கிற்காக செலவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்த கருத்தரங்கிற்கு சிலர் சென்று வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மார்க்ஸின் நண்பர்களான சுசீந்திரன், இடதுசாரிகள் என்றும் பெண்ணியவாதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்னும் ராஜேஸ்பாலா, நோயல் நடேசன் போன்றோர்  இலங்கை அரசின் பணத்தில் இங்கு வந்து சென்றார்கள். இந்தக் கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடந்தபோது ஷோபாசக்தி சென்னையில் இருந்தார். அவர் சென்று வந்தாரா என்பது நமக்குத் தெரியாது.
தவிரவும் இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் துறைதான் அகதிகள் மறுவாழ்வு, புனர்வாழ்வு போன்ற பணிகளில் சிலதைச் செய்கிறது. இந்த அமைச்சகத்திற்கு தமிழகத்திலிருந்தே 70% பொருட்கள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்படுகின்றன. அப்படியான ஏஜென்சிகளை நடத்துகிறவர்கள் யார் என்று உங்களுக்கு (மார்க்சுக்குத்) தெரியுமா? அப்படித் தெரியாவிட்டால் (உங்கள் நண்பர்களிடம் யாரிடம் கேட்டாலும் தெரியும்) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். இன்றைய தேதியில் புலி எதிர்ப்பு என்பது முதலீடில்லா வருமானம் ஈட்டக் கூடியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதாயங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. குரூப் நிதிகள், தனிநபர் நிதிகள் என தேவைக்கு ஏற்ற மாதிரி பரிமாறப்படுகிறது. உண்மையில் நீங்கள் இதை கண்டிக்க வேண்டும் என நினைத்திருந்தால் சுகன் பாடிய தேசிய கீதம் குறித்து கருத்துச் சொல்லியிருக்க வேண்டும், சுசீந்திரனின் புது விசை நேர்காணல் குறித்தும், அகிலன் கதிர்காமர் குறித்தும் உங்கள் நண்பர்களிடம் அல்ல வேறு ஆட்களிடம் விசாரித்து எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை திட்டி விட்டு அதோடு சேர்த்து எலலாவற்றையும் ஊத்தி மூடுவது நியாயம் ஆகாது. இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவது சிரமமான காரியமா என்ன? நானும் எழுதியிருக்கிறேன்.
Noel Nadesan (Australia)
Dr.Rajasingham Narendran (Middle East)
Mrs. Rajeswari Balasubramaniam (U.K)
Manoranjan Selliah (Canada)
Rajaratnam Sivanathan (Australia)
இவர்கள் எல்லாம் தன்னார்வக்குழுவினர்தான். இலங்கை அரசிற்கும் புலத்தில் உள்ள தமிழர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணி செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக இவர்கள் புலத்தில் ஈழம் என்கிற கருத்தை கைவிடச் சொல்கிறார்கள். இலங்கை அரசிடமோ கோடி கோடியாக நிதிகளைப் பெற்று செயல்படுகிறார்கள். இது தொடர்பாக ‘லிட்டில் எய்ட்’ என்ற நிறுவனத்தை இவர்கள் துவக்கியிருக்கிறார்கள். நண்பர்கள் முடிந்தால் Recent visit to sri lanka: summary report by tamil expats  என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படிக்கவும். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396. இவர்கள் எந்த அளவுக்கு புலிகளை விட கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவையும் முடிந்தால் பாருங்கள். http://littleaid.org.uk/little-aid-ambepusse-project-latest-video. எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களாம் இந்த தன்னார்வக்குழுவினர். துள்ளாத மனமும் துள்ளும் என்னும் இயக்குநர் எழில் அவர்களின் திரைப்படத்தில் உள்ள ‘‘தொடு தொடு எனவே வானவில் என்னை’’ என்கிற பாடலைத்தான் அந்த சிறுவ சிறுமிகள் பாடுகிறார்கள் என்பதை நாம் சிரமப்பட்டே புரிந்து கொள்ள முடியும். காரணம் துரோகக் குழுக்களுள் உள்ள சில இளைஞர்களை வைத்து அந்த சிறுவர்களை மனரீதியாக அச்சுறுத்தி இந்தப் பாடல் பாடப்படுவதை நீங்கள் சூழ நிலவும் இராணுவச் சீருடைகளைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். தற்போது, கைதட்டச் சொன்னால் கைதட்டும் பிணங்கள்தான் வன்னி மக்கள். பாடச் சொன்னால் பாடுகிறார்கள். இது சலிப்பைப் போக்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்கள் இந்த தன்னார்வக்குழுக்கள்.
இந்த தன்னார்வக்குழுக்கள் முகாம்களுக்குச் சென்று வந்து ‘‘மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே’’ என்று கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதோ அந்தக் கேவலத்தை நீங்களும் கொஞ்சம் படியுங்கள். http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454
கிழக்கு முஸ்லீம்கள்
புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை இராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயே இருக்கிறது. அது போல கிழக்கு தன்னார்வக்குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கியிருக்கிறது. எதிர்ப்பியக்கங்களற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமை இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமடைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெறுகிற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம்தான். ஆனால் இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குவதன் மூலம் கிழக்கு முஸ்லீம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள். இப்போதே கிழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கருணாவை வைத்து துவங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.
யுத்தம், இடப்பெயர்வு, படுகொலைகள் என தமிழினத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் தமிழர்களை விட பெரும்பான்மையாகி விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தற்காலத்தில் வைக்கும் சிந்தனை. காஷ்மீரிலும், மத்தியக் கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வதைபடும் இஸ்லாமிய மக்கள் மீது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் தனித்த அக்கறையும் ஆதரவும் எனக்கு உண்டு. இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். மக்கள் படுகொலைகளை ஒரு நல்வாய்ப்பாக யார் பயன்படுத்தினாலும் அது தவறு. மரபுகளும், பெரும்பான்மை வாதங்களும் தகர்க்கப்பட வேண்டும். அது இந்து, இஸ்லாமிய, தமிழன் என எதன் பெயரில் வந்தாலும் வன்முறையே. அந்த வகையில் கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டியவை. சைவத்தாலும், வைணத்தாலும் கறைபட்ட தமிழ் தேசியம் இன்னும் மீச்சம் மீதியிருப்பதில் ஏதேனும் செய்ய விரும்பினால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கிய அரசியல் செயல்படாகாவே அது இருக்க வேண்டும். மற்றபடி தன்னார்வக்குழுக்களில் பணி செய்யும் நண்பர்கள் தங்களின் நிதி அரசியலுக்காக வடக்கு, கிழக்கு முரணை கூர்மையடைய வைப்பது வேதனையளிக்கிறது.
பொதுவாக நியாயமான விமர்சனங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினால் உடனே இவன் மார்க்சை துரோகி என்கிறான். அவர் என்.ஜி.ஓக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக எழுதுகிறான் என இதையும் திரித்து கதை கட்டாதீர்கள். என்னளவில் மார்க்சின் மனித உரிமைச் செயல்படுகளின் மீது நான் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன். புலிகளை எதிர்ப்பதாலேயே ஒருவர் ஜனநாயகவாதியாகி ஆகிவிட முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் உண்மையான விடுதலை பற்றிப் பேசுவதுதான் என்கிற அளவில்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். ஏனென்றால் இவர்கள் “வெறுப்புக்கு எதிராகப் பேச” இந்து ‘ராமை’ப் பயன்படுத்துவார்கள். தமிழ் தேசியவாதிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் திட்ட மார்க்சைப் பயன்படுத்துவார்கள்.
பேராசிரியர் அ.மார்க்ஸ் இங்குள்ள ஈழ ஆதரவளர்கள் குறித்த புரிதல் இல்லாமல் இக்கட்டுரையை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகாலப் போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.
அது போல ஈழம் சாத்தியமில்லை என்பதோ ஈழம் என்கிற கருத்து முடிந்து விட்டது என்பதையோ நான் நம்பவில்லை. கடந்த காலத் தவறுகளில் இருந்து புதிய இயக்கங்களை ஈழ மக்கள் கண்டடைவதன் மூலம் பேரினவாதிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பதிலாக தன்னார்வக் குழுக்களை ஈழத்திற்குள் அனுமதித்தால் இப்போதல்ல எப்போதுமே ஈழத் தமிழர்கள் எழுந்திருக்க முடியாது. அவர்கள் எழ வேண்டும் என்பதே என் ஆசை. ஏனென்றால் பௌத்த பாசிச இலங்கை அரசின் நிலப்பரப்பினுள் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்துவாழும் சாத்தியங்கள் இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு அல்லது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்போம் அதை.
கடைசியாக,
கீற்று குறித்த கட்டுரையில் மார்க்ஸ் இப்படியான ஒரு வாக்கியத்தை புது விசை கட்டுரையில் பயன்படுத்துகிறார். “இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்’’ என்கிறார். அகிலன் கதிர்காமர் மாதிரியான இடது சாரி பாரம்பரியம் அன்றி, கருவாட்டுக்கூடை தலையில் தூக்கிச் சுமந்து முதல் தலைமுறையாக வெளியில் வந்திருக்கும் முதல் தலைமுறை எங்களுடையது. உண்மையிலேயே மரபுகளின் வன்முறை குறித்து நான் மார்க்சிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். இந்த வரிகள் அவரிடமிருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.

(நன்றி  டி.அருள் எழிலன்)

செட்டிகுளம் தடுப்பு முகாமில் சிறீலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் 3 சிறுவர்கள் - 2 பெண்கள் படுகாயம்

வவுனியா, செட்டிகுளம் தடுப்பு முகாமில் கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் சிறீலங்கா இராணுவத்தினர் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர் என வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த குறித்த 5 பேரும் முகாமிலிருந்து விறகு சேகரிக்கச் சென்றபோதே சிறீலங்கா இராணுவத்தினர் சுற்றி வளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.

இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்தனர் எனவும், அதையடுத்துத் தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனவும் சிறீலங்கா இராணுவப்பேச்சாளர் காரணம் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ராஜபக்சே அழுத்தம்


பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்டு ஒளிப்பரப்பட்டு வரும் இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் விளம்பரத்தில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் நடிக்குமாறு இலங்கையின் நட்சத்திர சுழல்ப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு ராஜபக்சே அழுத்தம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தான் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதாக கூறி, இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் முக்கிய நிர்வாகிககள் விடுத்த வேண்டுகோளை முத்தையா முரளிதரன் ஏற்கனவே நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜபக்சே முரளிதரனை தொடர்பு கொண்டு அந்த விளம்பர நிகழ்ச்சியில் தோன்றுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். இதேபோல் இலங்கை கிரிக்கட்டின் இடைக்கால செயலாளரான நிசாந்த ரணதுங்கவே முரளிதரனை விளம்பர நிகழ்ச்சியில் தோன்றுமாறு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கை கிரிக்கட் அணி நாடு திரும்பியதும் அணியில் இடம்பெற்றுள்ள அனைவரையும் இந்த விளம்பரத்திற்காக பயன்படுத்த நிசாந்த ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

Monday, December 21, 2009

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலம் – உருவாகின்றது சிங்கள நாடாளுமன்றத் தொகுதி

மணலாறில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகள் தமக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழர் தாயகத்தின் ‘இதயபூமி’யான இந்தப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள், தமது நலன்களைக் கவனிப்பதற்காக நாடாளுமன்றப் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

manalaru02
வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் வன்னி மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பிறேமரத்ன சுமதிபால ஆகியோர் வெலிஓயா சிங்களக் குடியேற்றவாசிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.
இந்தச் சந்திப்பின் போதே தமக்கும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெலிஓயாவைச் சேர்ந்த ஒருவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட இடமளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றையும் குடியேற்றவாசிகள் கைளித்துள்ளனர்.
manalaru01
தமிழரின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் நோக்கில், மணலாறில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.
gazette
இங்கு காலம்காலமாக குடியிருந்த தமிழ்மக்கள் 1980களின் தொடக்கத்தில் சிறிலங்காப் படையினரால் விரட்டியடிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் இந்த சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கியது.
நன்றி -நெருடல் இணையம் 

Sunday, December 20, 2009

கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை தமிழீழமே தீர்வு என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு(canada election)

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, 19-12-2009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக ‘ஆம்’ என்று 48,481 வாக்குகளும், எதிராக ‘இல்லை’ என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன.



இதன்பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ‘ஆம்’ என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் ‘ஆம்’ வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.


தேர்தலை நடத்திய நுளுரூளு என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.


நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.

உணவுக்காகவும் நிவாரணத்திற்காகவும் பாலியல் உறவு; ‘வெள்ளை வான்’ கடத்தல்; வெட்டைவெளிச் சி்த்திரவதைகள்: தடுப்பு வதைமுகாம் கொடுமைகள்

Friday, December 18, 2009

துவாரகாவின் (dwarga) சடலத்தை நாம் கண்டெடுக்கவில்லை: உதய நாணயக்கார


விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் (dwarga) சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை எனவும் அதனை ஒத்த சடலம் என இணையத்தளங்களில் வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் சிறீலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வன்னியில் நடைபெற்ற படை நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை இராணுவம் கைப்பற்றவில்லை. எனவே அவரின் சடலம் என தெரிவித்து இணையத்தளங்களில் உலாவரும் புகைப்படத்தை உறுதி செய்ய முடியாது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியின் சடலம் தவிர அவரின் குடும்ப உறுப்பினர்கள் வேறு எவரினதும் சடலங்களை நாம் கண்டெடுக்கவில்லை. பெண் உறுப்பினர்கள் பலரின் சடலங்களை கைப்பற்றப்பட்ட போதும், அவற்றில் துவாரகாவின் சடலத்தை நாம் இனம்காணவில்லை. இணையத்தளங்களில் வெளியாகிய படங்களை ஒத்த சடலத்தையும் இன்றுவரை நாம் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

(காணொளி) துவாரகாவின் புகைப்படத்தில் உண்மை இல்லை: சீமான் திட்டவட்டமாக மறுப்பு – அந்தப் படம் பெண் போராளி இசைப்பிரியாவுடயது என அடையாளம் காணப்பட்டுள்ளது



நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல இது சிங்களவர்கள் நடத்தும் ஒரு உளவியல் போர் இது எனக் குறிப்பிட்டுள்ள சீமான் அவர்கள், அப் புகைப்படத்தில் காணப்படுவது ஒரு பெண்போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி வதைமுகாமில் இருந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் ஒருவரின் தகவலில் அடிப்படையில் இந்தப் பெண்போராளி,isappiriya இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியாவாக இருக்கலாம் என சில தவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, December 15, 2009

யார் இந்த விஜய் ?


யார் இந்த விஜய் ? இவரின் பூர்வீகம் என்ன ?

கங்கையில் விழுந்தாலும் காக்கை அன்னமாகாது’ எனும் பழமொழிதான் இதற்குரிய பதிலாக அமையும் !

‘காவிரிப்பிரச்சினையில், கர்நாடகத்தமிழர்களை வகைதொகையின்றிக் கொன்றொழித்தனர் கன்னடவெறியர்கள் !

இந்தக்கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டர்தான் விஜய் இன் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன்.

இருப்பினும் விஜய் மட்டும் ,
தமிழகத்தில் பிறந்தமையாலும்,
ஈழத்தமிழச்சியை மணந்தமையாலும்
தாம் தமிழர்தான் என்பதுபோல் மாயைத்தோற்றமொன்றைக்காண்பிக்க முனைந்தார்.

அதாவது, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எதிர்த்துத் தமது இரசிகர்களுடன் இணைந்து
உண்ணாவிரத நாடகத்தைத் தமிழகத்தில் அரங்கேற்றிமுடித்தார்.

தற்போது, ‘ அற்றகுளத்தில் அறுநீர்ப்பறவை ’ போல

வாலைக்குழைத்துக்கொண்டு குப்பைக்குச்சென்றுவிட்டார் !

கொலைகாரி சோனியாவின் மகன், ராகுலுடன் மேற்கொண்ட இரகசியசந்திப்பு
அம்பலமானதும், “ சொனியாவின் கொள்கைகள் எனக்குப்பிடிக்கும்” என்று எவ்வளவு திமிருடன் பதிலளித்தார்.

அதாவது, முள்ளிவாய்க்காலில் சொனியா மேற்கொண்ட படுகொலைகள் தமக்குப் பிடிக்குமாம்.

இவருக்கு இதில் நாம் கொடுக்கும் பாடம், அஜித், அர்ஜுன் போன்ற தமிழின விரோதிகளுக்கும்
ஒரு எச்சரிக்கையாக அமையட்டும் !

நாம் தமிழர் என்பதை நிரூபிப்போம் !

இதிலாவத் ஒன்றிணைவோமா?

வேட்டைக்காரன் திரைப்படம் புறக்கணிப்பு

ஊரே எரிய மன்னன் பிடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை! 35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது.

அரை இலட்சம் மக்களை இழந்துவிட்டோம் சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை…இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே
(Iraj Weeraratne)

இவருடன் சேர்ந்து கைகோர்த்து நிக்கிறது வேட்டைக்காரன் யுனிட்! இன்னும் சில பாடல்களை விஜய் அன்ரனி இவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாராம். எதுவும் செய்யுங்கள் எங்களிடம் வராதீர்கள். வந்தால் புறக்கணிப்போம்.

Friday, December 11, 2009

மக்கள் விடுதலை இராணுவம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காயா ?


கிழக்கில் புதிதாக ஆரம்பிக்கபட்டுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. கியூபாவுடனும், பாலஸ்தீன விடுதலை அமைப்புடனும் இணைந்து இந்த மக்கள் விடுதலை இராணுவம் செயற்படப் போவதாக தமிழர்களின் அபிமானத்தைப் பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம், ஊடாக செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ள கொமாண்டர் கோணேஸ் என்பவர் லண்டன் டைம்ஸுக்கு நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

1970 துகளில் கியூபா மற்றும் பாலஸ்தீன நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு உதவியது என்பதில் ஜயமில்லை. இருப்பினும் அப்போது இருந்த அரசியல் பின்ணணி, புரட்சி அமைப்புக்களின் கொள்கைகள் என்பன எமது விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் உதவ ஏதுவாக இருந்தது. இருப்பினும் தற்போதைய பூகோள அரசியல் நிலையைக் கருத்தில் கொண்டால் கியூபா நாடானது இலங்கைக்கு பல உதவிகளை வழங்கிவருவதுடன், ஆயுதக் கொள்வனவில் எவ்வகையான ஆயுதங்களைக் கொள்வனவுசெய்ய வேண்டும் என அறிவுரைகளையும் கூறிவருகிறது.

இதேபோல பாலஸ்தீன நாடும் தற்போது பல பின்னடைவுகளைச் சந்தித்து, "ஹமாஸ்", "பத்தா" என இரு போராட்ட அமைப்பு தமக்குள்ளே பலப்பரீட்சையில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு, வேறு நாடுகளில் உள்ள போராட்டங்களுக்கு உதவும் என வெளிப்படையாகக் கூறமுடியாது.

அத்துடன் இலங்கை அரசின் முகமூடியைக் கிளித்து பல விடையங்களை தமிழர்களுக்குச் சார்பாக எழுதி, உண்மை நிலையை வெளியுலகிற்க்குக் கொண்டுவந்து, தமிழர்களின் அபிமானத்தை பெற்ற லண்டன் டைம்ஸ் ஊடகம் ஊடாக இந்தச் செய்தி ஏன் வெளிவரவேண்டும் ? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள். சமீபகாலமாக ஹம்சா இங்கிலாந்தில் செயல்பட்டுவருவதால், இவரூடாக இச் செய்திகள் பிரசுரமாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் இவ்வாறான ஒரு ஊடகத்தில் செய்தி வந்தால் தமிழர்கள் நம்புவார்கள் என ஹம்சா நிணைத்திருக்கலாம். நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா ?

இனிக் கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆரம்பித்துள்ள இந்த மக்கள் விடுதலை இராணுவத்தின் நோக்கம் என்னவாக இருக்கலாம் என ஆராய்ந்தால், இதுவரை காலமும் தளபதி ராம் அவர்களை வைத்து இலங்கை அரசு ஆடிவந்த நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளதால், கிழக்கில் உள்ள சில தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களைக் கொடுத்து புதிதாக மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளதாக அதிர்வு இணையத்திற்கு சில தகவல்கள் கசிந்துள்ளன. இருப்பினும் இதனைச் சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை.

இலங்கையில் தேர்தல் சூடு பிடித்துள்ளவேளையில், எதிர்கட்சிப் பிரமுகர்கள் சிலரை இலங்கை அரசானது மறைமுகமாக தீர்த்துக்கட்ட இது ஒரு முணைப்பாக இருக்கலாம். எதிர்க் கட்சிப் பிரமுகர்களை தீர்த்துக்கட்டிவிட்டு, அதனை முன்போல விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என தற்போது கூறமுடியாது. அப்படியாயின் தென்னிலங்கையில், மகிந்தவின் அரசு செல்வாக்கை இழக்கநேரிடும். அதற்காக இப்படி ஒரு அமைப்பை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நின்றுவிடாமல் புலம்பெயர் மக்கள் அல்லது ஈழத்தில் உள்ள இளைஞர்கள் திரும்பவும் ஒரு ஆயுதப்போராட்டத்தை தொடங்க நினைத்திருந்தால், மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதே இனி நாம் ஏன் ஒன்றை ஆரம்பிக்கவேண்டும் என எண்ணுவார்கள். அதைவிட அது உண்மையான போராட்ட இயக்கம் என சில இளைஞர்கள் எண்ணி சேரவும் நிணைப்பார்கள், அப்படி சேர நினைக்கும் இளைஞர்களையும் இலங்கை அரசு இலகுவாக இனம்காண முடியும். எனவே மக்கள் விடுதலை இராணுவம் என்று ஒன்றை ஆரம்பித்துள்ளது ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தவா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

இவர்கள் உண்மையான போராட்ட இயக்கமாக இருந்தால் விரைவில் இவர்கள் நடவடிக்கை மூலம் இது தெளிவாகத் தெரியும். தற்போது உள்ள சூழ் நிலையில் எதையும் எடுத்த எடுப்பில் நாம் நம்பிவிட முடியாது என்பதே யதார்த்தம்.

அப்படியே ஒரு புதிய ராணுவக் கட்டமைப்பு இந்த 7 மாதத்தில் கொமாண்டர் கோணேஸ் உருவாகியிருந்தாலும், தம்மை ஒரு இராணுவக் குழு என இவர்கள் இவ்வளவு வேகமாக ஏன் தம்மை அறிமுகப்படுத்தவேண்டும் ? அவ்வாறு அவர்கள் தம்மை அடையாளப்படுத்தியதை ஏன் சிங்கள ஊடகங்கள் பெரும்செய்தியாக வெளியிடவேண்டும், குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள சிங்கள ஊடகங்கள் இச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதின் அர்த்தம் என்ன ? இவற்றை எல்லாம் பொறுத்திருந்து மிக அவதானமாக தமிழ் மக்கள் நிதானத்துடன் பார்க்கவேண்டும் என அதிர்வு இணையம் மக்களை வேண்டி நிற்கிறது. உண்மையாகப் போராடும் அமைப்பை மிகச் சுலபமாக நாம் அடையாளம் காணலாம் என்பதில் ஜயமில்லை. இதனையே நாம் செய்தும் இருக்கிறோம். தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப விரைவில் ஒரு உண்மையான போராட்ட அமைப்பு களமிறங்கும். அது விடுதலைப் புலிகளின் அதி நவீன படை அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


மலரும் தமிழீழம் விரைவில்... ஏன் என்றால் மாண்ட மாவிரர்களின் இலட்சியம்
அதுவென்றபடியால்...
tamilellam news

நன்றி(அதிர்வுஇணையம்)