வவுனியா, செட்டிகுளம் தடுப்பு முகாமில் கடந்த சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் சிறீலங்கா இராணுவத்தினர் மேற் கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர் என வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த குறித்த 5 பேரும் முகாமிலிருந்து விறகு சேகரிக்கச் சென்றபோதே சிறீலங்கா இராணுவத்தினர் சுற்றி வளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
இராமநாதன் முகாமிலிருந்து சிலர் அடுத்துள்ள ஆனந்தகுமாரசாமி முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்ல முயன்றவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்தபோது, முகாமிலிருந்தவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்தனர் எனவும், அதையடுத்துத் தற்பாதுகாப்புக்காக படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் எனவும் சிறீலங்கா இராணுவப்பேச்சாளர் காரணம் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment