Thursday, December 24, 2009

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ராஜபக்சே அழுத்தம்


பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்களை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்டு ஒளிப்பரப்பட்டு வரும் இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் விளம்பரத்தில் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் நடிக்குமாறு இலங்கையின் நட்சத்திர சுழல்ப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு ராஜபக்சே அழுத்தம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தான் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதாக கூறி, இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் முக்கிய நிர்வாகிககள் விடுத்த வேண்டுகோளை முத்தையா முரளிதரன் ஏற்கனவே நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜபக்சே முரளிதரனை தொடர்பு கொண்டு அந்த விளம்பர நிகழ்ச்சியில் தோன்றுமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். இதேபோல் இலங்கை கிரிக்கட்டின் இடைக்கால செயலாளரான நிசாந்த ரணதுங்கவே முரளிதரனை விளம்பர நிகழ்ச்சியில் தோன்றுமாறு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன் இலங்கை கிரிக்கட் அணி நாடு திரும்பியதும் அணியில் இடம்பெற்றுள்ள அனைவரையும் இந்த விளம்பரத்திற்காக பயன்படுத்த நிசாந்த ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment