Friday, December 18, 2009

துவாரகாவின் (dwarga) சடலத்தை நாம் கண்டெடுக்கவில்லை: உதய நாணயக்கார


விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் (dwarga) சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை எனவும் அதனை ஒத்த சடலம் என இணையத்தளங்களில் வெளியாகிய படங்கள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் சிறீலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வன்னியில் நடைபெற்ற படை நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் சடலத்தை இராணுவம் கைப்பற்றவில்லை. எனவே அவரின் சடலம் என தெரிவித்து இணையத்தளங்களில் உலாவரும் புகைப்படத்தை உறுதி செய்ய முடியாது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியின் சடலம் தவிர அவரின் குடும்ப உறுப்பினர்கள் வேறு எவரினதும் சடலங்களை நாம் கண்டெடுக்கவில்லை. பெண் உறுப்பினர்கள் பலரின் சடலங்களை கைப்பற்றப்பட்ட போதும், அவற்றில் துவாரகாவின் சடலத்தை நாம் இனம்காணவில்லை. இணையத்தளங்களில் வெளியாகிய படங்களை ஒத்த சடலத்தையும் இன்றுவரை நாம் காணவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment