Tuesday, December 29, 2009

கோத்தபாய, சிறிலங்காவின் பாரிய வன்முறையாளர் என்கிறது “த கார்டியன்”

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே சிறிலங்காவின் பாரிய அடிப்படை மனித உரிமைகள் வன்முறையாளர் என த சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத்தில் பணியாற்றுகின்றவர் என்ற அடிப்படையில் அவர் மனித உரிமைகள், மனிதாபிமானம், சர்வதேச யுத்த சட்டங்கள் என்பவற்றை அறிந்திருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சகோதரத்துவத்துக்காவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அவர் சிறிலங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
கடந்த ஓரு தசாப்த காலமாக தாய்நாட்டையே பார்த்திராத கோத்தபாய, திடீரென களத்தில் இறக்கப்பட்டதன் விளைவாக மனிதாபிமானம் பாராமல் பல அப்பாவி உயிர்களை பலிகொடுக்க நேரிட்டது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமது மாமாவை பாதுகாப்பு செயலாளராக வைத்திருந்ததை போலவே மகிந்த ராஜபக்ஷவும் வைத்திருக்க முயற்சித்தார்.
எனினும் கோத்தபாய தமது யாருக்கும் அடங்காத இனத்துவேச வெறியுடன் செயற்பட்டு, எவ்வாறாயினும் தமது இலக்கை அடைய வேண்டும் என ஜனாதிபதியையும் கட்டுப்படுத்த ஆரம்பித்ததாக த கார்டியன் தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று கோத்தபாயவுக்கு பட்டம் வழங்கியமையையும் இந்த இணையத்தளம் விமர்சித்துள்ளது.
குறைந்த பட்சம் அனுருத்த ரத்வத்தையேனும் யுத்தகளத்தை பார்வையிட்டுள்ளார், எனினும் கோத்தபாய யுத்த களத்துக்கு செல்லாமல் பாரிய அரசியல் மற்றும் இராணுவ அதிகாரங்களை கையில் எடுத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு பட்டம் வழங்குவது எந்த அளவு பொருந்தும் என கேள்வி எழுந்துள்ளதாக த காடியன் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment