Saturday, May 22, 2010

இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள்

கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து சிங்கள இராணுவத்தினர் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் ஒரு போர்க்குற்றக் காட்சி ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் சிங்களப் படைகளால் அரங்கேற்றப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடிய காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்ற ஆதாரங்களில் சிலவற்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch)  வெளியிட்டுள்ளது.
இதில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஒரு போராளியை சிங்கள படையினர் தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்து தமிழரின் தேசியக்கொடியினை போர்த்தி அழகுபார்த்த கோரக் காட்சியின் படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.
இந்த படத்தை பார்த்ததும் தமிழா உன் மனம் கொதிக்கிறதல்லவா? அமெரிக்காவின் குவண்டேனமா சிறையை போல இங்கே பொதுமக்களும் போராளிகளும் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆதாரபூர்வமாக தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
மனிதநேயத்தையும் பொருட்படுத்தாது, கண்மூடித்தனமாக நடந்த இக்கொடுமைகளின் ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை வெட்டவெளிச்சமாகிறது.
இச்செய்தியானது உலக தமிழ் மக்களை உலுக்கியுள்ள இவ்வேளையில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், கொடுங்கொல் நாடாகிய இலங்கையை போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வேண்டியுள்ளனர்.

No comments:

Post a Comment