Tuesday, May 18, 2010

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை

எமது அன்பிற்கும் பாசத்திற்குமுரிய தமிழீழ மக்களே!
உலகத் தமிழர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு ஒட்டுமொத்தப் பேராதரவோடு “போர்க் குற்றவியல் நாள் மே-18” ஐப் பிரகடனப்படுத்தி இந்நாளில் அனைத்து மாவீரர்களையும், பேரினவாதத்தால் மானச்சாவெய்திய மக்களையும் நினைவு கூருவது தமிழீழ மக்கள் அனைவருக்கும், எமது விடுதலை இயக்கத்திற்கும் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.
உலகத் தமிழினத்தின் இதயங்களில் ஆறாத வடுவாகவும், ஆற்றப்படுத்த முடியாத துயரமாகவும் பதிந்து போன போர்க் குற்றவியல் நாள் இன்று. மானிடகுலத்திற்கு அமைதியைப் போதித்த புத்தபிரான் குருதிக் கண்ணீர் சொரிந்து வெட்கித் தலைகுனியும் வகையில் மகாவம்ச வெறி கொண்டு எமது மண்ணில், எங்கள் வரலாற்றுத் தாயகத்தில் சிங்கள பௌத்த மேலாதிகக் வாதம் ஊழித்தாண்டவமாடிய
கொடூர நாள் இன்று.
விடுதலை என்ற சத்திய வேள்வியில் நாம் கொடுத்த உயிர்விலை அளப்பரியது. கண்ணீரும், குருதியும், தசையுமாக எமது தேசம் சந்தித்த இழப்பு ஒப்பற்றது. எமக்காகவும், எமது வருங்காலத் தலைமுறையின் நலவழ்வுக்காகவும் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் உயிர்க்கொடை வார்தைகளில் விபரிக்க முடியாதது. அந்த மாவீரர்களின் வழியில் நின்று மானச்சாவெய்திய எங்கள் அன்பு மக்களின் இழப்பு என்றென்றுமே ஈடுசெய்ய முடியாதது.
வடக்குக் கிழக்குப் பகுதியில் கைதுகளும், சிறை வைப்புக்களும், கொலைகளும், காணாமல் போதல்களும், பாலியல் வல்லுறவுகளுமாக முன்னெப்போதும் இல்லாதவாறு நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கிறன. அடிப;படைச; சுதந்திரமாகக் கருதப்படும் பேச்சுச் சுதந்திரம், நடமாட்ட சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல்கள் என்பன சிங்கள இனவெறியர்களின் நயவஞ்சகத்தால் பறிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இராணுவ முகாம் நிறுவதற்குத் தாயக மண்ணின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றது. சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு, தமிழர்களின் அடையாளச் சின்னங்களையும்இ எமது மண்ணின் மைந்தர்களாக என்றும் எம் மனங்களால் போற்றி வழிபடப்படும் மாவீரர்களின் துயிலும் இல்லங்களையும் அழித்து, அவ்விடங்களில் புத்தர் சிலைகளாலும் அரசமரக் கன்றுகளாலும் தனது சிங்கள மயமாக்கலை அரங்கேற்றி வருகிறது.
மக்களுடைய அடிப்படை உரிமைகள் யாவற்றையும் புறந்தள்ளி, அவர்கள் தடுப்பு முகாம் கைதிகள் போல் அடைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா சபையும் சரி, சனநாயக விழுமியங்களைப் பற்றிப் பேசும் நாடுகளும் சரி எந்த அடிப்படையில் செயற்படுகின்றன என்பதே மக்களின் கேள்வியாகவுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளுககு; ஊடகவியலாளரக் ள, அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தோர் செல்லமுடியாதுள்ளது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் என்னவென்றே தெரியாத, பிறர் அறிந்துகொள்ளமுடியாத சூழ்நிலையில் மக்கள் அங்கு அடக்கு முறைக்குள் வாழ்கின்றார்கள். இன்னும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் தடுப்பு முகாம்களில் அடைத்து
வைக்கப்பட்டுள்ளார்கள்.
அரசியல் கைதிகளையும், முன்னாள் போராளிகளையும் ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் தடுப்புமுகாமில் நெடுநாளாக அடைத்து வைப்பது ஒருபாரிய மனித உரிமை மீறலேயாகும். எனவே அவர்களை விடுவிப்பதறகு; இராசதந்திர, அரசியல ; தொடரபு; கள் ஊடாக புலமn; பயர்
மக்கள் குரல் கொடுக்கவேண்டும். மக்களின் பாதுகாப்பு வலயங;கள் மருத;துவமனைகள் மீது சிறிலங்கா அரச படைகள் சர்வதேச போர்ச் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக, தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள், விசவாயுக் குண்டுகள், வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகள், தேமோபாரிக் வெப்பக் குண்டுகள், பாரிய எடை கூடிய விமானக் குண்டு வீச்சுக்கள் என்பனவற்றை தரை, வான், கடல் மூலம் நடாத்தி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின.
சிறிலங்கா அரச பயங்கர வாதத்தினால் நசுக்கப்படும் உரிமைக் குரல்களையும், இனப்படுகொலைகளையும் கண்டித்து மேற்கு நாடுகளில் தமிழர்கள் நடத்திவரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள், கண்டனப் பேரணிகள் சிறிலங்காவிற்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மேற்குலகத்தவரின் கவனத்தைக் கவரும் வகையில் போர்க் குற்றவியல் சாட்சியங்களை முன்வைத்து, போர்க்குற்றவாளிகளை ஐ.நா சட்டத்தின் முன் நிறுத்த ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தொடர்ந்து
செயற்படுமாறு வேண்டுகின்றோம்.
சில நாடுகளில் எமது மனித நேய பணியாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தமை தமிழ் மக்களின் உரிமைக் குரலை தடுத்து நிறுத்துவதோடு, மனித நேயத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகவும் இருக்கின்றது. சிறிலங்காவைத் தண்டிக்க வேண்டிய நாடுகள் மாறாக தமிழ் மக்களை தண்டிப்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றது.
உலக மக்களுக்கும், மானிட விழுமியங்களுக்கும் சிறு தீங்கும் இழைக்காது வாழ்வுரிமைக்காகப் போராடும் எமது தேசப் பணியாளர்களை உலகம் பகைமைப் போக்குடன் “பயங்கரவாதிகளாக” அணுகுவதை நிறுத்தி, அவர்களது மனித நேயப் பணிகளை சுதந்திரமான முறையில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, ஓயாத புயலாக வீசிய போரில், சொந்த மண்ணில் ஏதிலிகளாகிய எங்கள் உறவுகள், இன்று வதைமுகாம்களில் திறந்த வெளிச்சிறைக் கைதிகளாகவும், சொந்த ஊரிலும், வாழ்விடங்களிலும் நடைபிணங்களாகவும் அல்லாடும் அவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஓராண்டாகியும் தமது அன்றாட வாழ்வினில் சுயதேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழுகின்ற எம்மின மக்களுக்குப் புலம்பெயர ; மக்கள் தொடர்நதும் உதவி செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை தமது மூச்சாக வரித்துத் தம்மை ஆகுதியாக்கிய எமது மாவீரர்களையும், மானமக்களையும் நினைவில் நிறுத்தி, கனத்த இதயங்களுடன் நினைவுகூரும் இந்நாளில், சகல தடைகளையும், சவால்களையும், நெருக்கடிகளையும் தாண்டி எமது சத்திய இலட்சியத்தை வென்றெடுப்போம் என்று உறுதிகொள்வோமாக.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

No comments:

Post a Comment