Thursday, May 27, 2010

தமிழருக்கு எதிராக விகடன் கக்கும் நஞ்சு



ஈழப் பிரச்சனைபற்றி ஒரு கட்டுரை பிரபாகரனின் அட்டைப் படத்துடன் வெளியிட்டால் நல்ல வியாபாரம் நடக்கும் என்பதை விகடன் குழுமப் பத்திரிகைகள் உணர்ந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம். இதில் விடுதலைப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். எல்லாம் வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்தசாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். ஒரு பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை.

இலங்கை அரசு தனது பொய்ப்பிரச்சாரத்திற்காக உலகெங்கும் பெரும்தொகைப் பணத்தைச் செலவழிப்பதை நாம் அறிவோம். அம்சா சென்னையில் இருக்கும்போது பல ஊடகவியாலாளர்களுடன் நல்ல உறவைப் பேணினார் என்பது உண்மை. இடையில் ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர் ஒருவர் பதவி நீக்கப் பட்டார். விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் என்பவர்தான் அவர். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும், காணிவீடுகள் விற்பனைத் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.
19ம் திகதி மே மாதம் வெளிவந்த ஜுனியர் விகடன் இதழில் முள்ளிவாய்க்கால் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக் கலவரத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்புப்போல் ஏன் முள்ளி வாய்க்கால் படுகொலையின் போது எழவில்லை என்று ஜுனியர் விகடன் "ஆராய்கிறது".
விகடன் அதற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட "அந்நியமாதல்" நிலையையும் காரணம் காட்டுகிறது.
அப்போது இலங்கையில் தலையிட இந்தியாவிறகு திருகோணமலையிலும் சிலாபத்திலும் அமையவிருந்த அமெரிக்க படைத்துறை வசதிகள் காரணமாக இருந்தது.
இந்தியா வேண்டுமென்றே 1983 இனக்கலவரம் நடக்க விட்டிருந்தது. அது பற்றி மேலும் வாசிக்க இங்கு சொடுக்கவும்:1983 இலங்கை இனக் கொலை இந்திரா காந்திக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது
தனது தேவைக்காக இந்திய உளவுத்துறையும் அதன் தமிழ்நாட்டுக் கைக்கூலிகளும் தமிழர்களைத் தூண்டிவிட்டனர். தமிழ்நாட்டின் சகல ஊடகங்களும் ஈழத் தமிழர்களை ஆதரித்தன. அதன் பிறகு வளர்ந்த தமிழ்நாட்டு-ஈழத் தமிழர்கள் இணைவு இந்தியாவை மாற்றி யோசிக்கவைத்ததை விகடன் மறைத்தது.
இருபதியானாயிரத்திற்கு மேற்பட்ட இந்தியப்படைகள் போர்களத்தில் சிங்களப் படைகளுக்குப் பின்னால் நின்று இராமர் வாலியைக் கொன்றது போல் தமிழர்களைக் கொன்றதை விகடன் அறியாதா?
விகடன் தமிழ்நாட்டு தொலைக்காட்சிச் சேவைகளையும் குற்றம் சாட்டுகிறது. ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் பிரித்து வைப்பதில் இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகியோரின் பார்பனக் கூட்டமைப்பின் பங்களிப்பை விகடன் மூடி மறைத்து விட்டது. இம்மூவர்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டமையை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை? சிங்கள ரத்னா என்ற பட்டம் இந்து ராமிற்கு ஏன் வழங்கப்பட்டது? அவரின் பத்திரிகையியல் பயிற்ச்சிக் கல்லூரிக்கான நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பதை விகடன் அறியாதா? சோவின் பொய்ப் பிரச்சாரங்களை விகடன் அறியாதா? சுப்பிரமணிய சுவாமியின் பேத்தல்களை விகடன் அறியாதா?
ஜீனியர் விகடன் மேலும் சொல்கிறது:
  • கடந்த 25 ஆண்டுகளாக முறையான கல்வி பெற முடியாத இனமாக ஈழத் தமிழினம் மாற்றப்பட்டது.
இலங்கையில் இத்தனை மோசமான போர்ச்சூழலிலும் தமிழர்கள் கல்வியைக் கைவிடவில்லை என்பதை நாம் அறிவோம். அங்கு நடக்கும் பரீட்சை முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. தமிழர்களின் கல்வித்துறை பல பின்னடைவுகளைச் சந்தித்தது உண்மை. ஆனால் கல்வி பெறமுடியாத் ஒரு இனமாக ஈழத் தமிழினத்தை மாற்றமுடியாது என்பதை உலகறியும். கட்டுரையாளரின் அறிவீனத்திற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

நீலிக் கண்ணீர் வடிக்கிறார் கட்டுரையாளர்: தமிழ் இனத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் துயரம் தமிழ்நாட்டில் உள்ள அறிவுஜீவிகளைப் பாதித்ததாகவே தெரியவில்லை.
ராமின் இந்துப் பத்திரிகையைப் படிக்கும் "அறிவுஜீவிகள்" எப்படி தமிழ் இனத்தைப்பற்றி கவலைப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம் விகடன் அறியாது.

இலங்கையில் மீண்டும் தமிழ்த் தேசியம் தலையெடுக்காமல் இருக்க தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்களக் குடியேற்றம் இந்தியாவின் உதவியுடனும் ஆலோசனையுடனும் இப்போது நடக்கிறது என்பதை ஏன் விகடன் சுட்டிக் காட்டவில்லை?
  • முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பேசும்போது அதை நமது அரசியல் சுயலாபத்துக்காகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். நாமும் மனிதர்கள்தான், நம்மிடமும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது என்பதை நிரூபிக்க இது ஒரு சந்தர்ப்பம். இப்போதாவது நாம் செயல்படுவோமா?
என்று முடிக்கிறது விகடன்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தைப் பற்றிப் பேசும்போது பத்திரிகை வியாபாரத்தை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாமா?

(நன்றி-வேல் தர்மா- )

No comments:

Post a Comment