Tuesday, January 12, 2010

தமிழர் வரலாறு தேசியக் குறியீடுகள் பதிவுகள் தேசியத் தலைவர் மண்ணின் கதைகள் செவ்வாய், ஜனவரி 12, 2010 14:19 | புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவே உள்ளது -சித்தார்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படாலும் மக்கள் மத்தியில் அவர்கள் செல்வாக்கு பெற்ற அமைப்பாகவெ தொடர்ந்தும் இருந்து வருவதாக புளொட்ட அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வலுவை இல்லாமல் செய்வதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச மீது தமிழ் மக்கள் வெறுப்புடன் இருப்பதாகவும் அதனால் இம்முறைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்காகவேனும் அவர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பார்கள் என்றும் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே சித்தாhதன் இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இது வரை காலமும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படாமல் தனித்த துணை ஆயுதக் குழுவாக பாதுகாப்பு படைகளுடன் மட்டும் தமது உறவுகளை மட்டுப்படுத்தியிருந்த புளொட் அமைப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க முன்வந்தமை குறித்து கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை தோன்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.  புளொட்ட அமைப்பிற்கு அரசாங்க தரப்பால் வழங்கப்பட்டு வரும் சலுகைகள் மற்றும் பாதுகாப்புகள் நிறுத்தப்படும் என்ற எச்சரிக்கை காரணமாகவே மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் நிலைக்கு புளொட்ட தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தற்போதைய நிலையில் புளொட்ட அமைப்பின் தலைவர் தமிழ் மக்களின் உண்மையான மன நிலையினை புரிந்து கொண்டுள்ளமை வரவேற்பிற்குரியது என்று அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment