தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்குப் போராடும் தமிழ்நாட்டு ஆதரவாளர்கள்
இந்தியாவிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட அந்த அமைப்பு மீதான தடையை நீக்குவதற்காக சட்டரீதியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பிபிசியின் செய்தியாளர் ரி.என்.கோபாலன் சென்னையிலிருந்து தெரிவித்துள்ளார். அவரது செய்தி அறிக்கை இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் முழுவிபரமாவது,
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது வரலாறாகிவிட்டது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ள அதன் ஆதரவாளர்கள் அந்த அமைப்பு மீதான தடையை இந்தியாவில் நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை நீதிபதி விக்கிரமஜித் சென் அவர்கள் மேற்கொண்டுவருகிறார்.
மே 1991ல் அமுல்படுத்தப்பட்ட இந்தத் தடைச்சட்டத்தை நீக்குவது சாத்தியமில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றபோதும் அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் தமது முயற்சிகளைக் கைவிடவில்லை. இது நீதியற்றது.
தமிழீழ விடுதலைப்புலிகளால் இனிமேல் எவருக்கும் அச்சுறுத்தல் கிடையாது என வாதிடுகின்றனர் அவர்கள்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து மே 1991ல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.
இந்தத் தடையானது 1967ம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக்குழு இந்தத் தடையை நீடிக்கவேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறுதான் இவ்வளவு காலமும் இத்தடை நீடிக்கப்பட்டு வந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்தவரையிலும் இத்தடையானது வழமையாக நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த காலங்களிலும் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் இந்தக் குழுவின் முன் தோன்றி இத்தடைக்கு எதிராக வாதிட்டனர். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டிலுள்ள புலிகளுக்குச் சார்பான அமைப்புக்கள்கூட பகிரங்கமாகக் கண்டித்து விமர்சிப்பதைத் தவிர, இத்தடையை முறியடிப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
ஆனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ மற்றும் ஈழ மக்கள் ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ நெடுமாறன் ஆகியோர் இத்தடவை விக்கிரமஜித் சென் அவர்களின் விசாரணைக்குழுவின் தோன்றி தடையை நீடிப்பதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர்.
இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக இல்லாதபோது அந்த அமைப்பு மீதான தடை எதற்கு என்பதே அவர்களது வாதம்.
தமிழ்நாடு மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் பி.புகழேந்தி இந்த விசாரணைக்குழுவின் முன் விவாதிப்பதற்கு இன்னமும் அனுமதிக்கப்படாதநிலையில் அவர் மகஜர்களைச் சமர்ப்பித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் எந்தவொரு நடவடிக்கையுமே மேற்கொள்ளப்படாத நிலையில் இந்தத் தடை இந்தியாவில் எதற்கு இருக்கவேண்டும் என அவர் அறிய விரும்பினார்.
எவ்வாறிருந்தும், பிரதான அரசியல் கட்சியொன்று பகிரங்கமாக இத்தடையை எதிர்த்ததுடன் விசாரணைக்குழுவின் முன் தோன்றியுள்ளது.
ஆயுதங்களுடனோ அல்லது ஆயுதங்களின்றியோ தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தமிழ் நாட்டின் தமிழ் தேசியவாதிகளும் ஒன்றுசேர வழிவகுக்கும் என்பதால் அந்த அமைப்புமீதான தடையை நீக்குவதற்கு தமிழ்நாட்டு காவல்துறையும் தயங்குகிறது.
பின்னர் அவர்களால் மாநிலத்தின் சட்ட ஒழுங்கிற்குப் பிரச்சினை ஏற்படலாம், என்கிறது காவல்துறை.
இந்த விசாரணைக்குழுவின் அடுத்த அமர்வு ஒக்ரோபர் 28ல் சென்னையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment