Tuesday, October 26, 2010

தேசியத்தலைவர், பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழ்களை அனுப்ப சிறீலங்கா அரசு மறுப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை
வழங்கில் இருந்து தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
மற்றும் புலனாய்வுத்துறை கட்டளை அதிகாரி பொட்டு அம்மான் ஆகியவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 
பொட்டு அம்மான் ஆகியோரின் மரணம் குறித்த மரணச்
சான்றிதழ்களை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில்
கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்ததை இந்தியா இதுவரை உறுதிப்படுத்தாத போதும் தற்போது முதல் முதலாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் மரணம் குறித்த மரணச் சான்றிதழ்களை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை. அவர்கள் இறந்துவிட்டதாக நீதிபதி ஒருவர் உறுதிப்படுத்திய கடிதம் ஒன்றையே அது அனுப்பிவைத்துள்ளது.
சென்னையில் ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி இதுகுறித்து வெளியிட்டுள்ள குறிப்பில், “முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகிறது (”The case against the absconding accused A1 Prabhakaran, A2 Pottu Amman alias Shanmuganathan Sivasankaran is hereby dropped and the charges against them ordered abated”), என்று கூறியுள்ளார்.
குற்றவாளியின் மரணத்துக்குப் பிறகு அவர் மீதான குற்றச்சாட்டுகளும் தானாகவே காலாவதியாகிவிடும் என்ற இந்திய குற்றவியல் சட்ட அடிப்படையில் இந்த முடிவை மேற்கொள்ள சிபிஐ அனுப்பிய குறிப்புகளின் பேரிலேயே நீதிபதி தட்சிணாமூர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்த அமிர்தலிங்கம் கொலை வழக்கிலிருந்து தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டம்மான் பெயர்கள் நீக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையும் சிபிஐ தனது குறிப்பில் தெரிவித்திருந்தது.



No comments:

Post a Comment