Tuesday, February 16, 2010

சொல்லடா தமிழா... யாராடா நீ?

சொல்லடா தமிழா...
யாராடா நீ?

அறிவுக்கெட்டு, மானம் கெட்டு,
குட்ட குட்ட குமைந்து,
குழைந்து வெட்கங்கெட்டு,
கூழைக் கும்பிடு போட்டு,
மறவன் வழிவந்த
தொன்மையை மறந்து,
ஆரிய மாயையில் மயங்கி,
சித்தம் மழுங்கி,
நெஞ்ஞொடுங்கி அஞ்சி,
அஞ்சி தொடை நடுங்கியாய்,
வாழ்ந்து ஒழிந்து,
கொண்டிருக்கிறாயே...!

சொல்லடா தமிழா...
யாராடா நீ?

´தலையில் பிறப்பதுண்டோ
தறுதலையே?
தோளில் பிறப்பதுண்டோ
தொழும்பனே?
இடுப்பில் பிறப்பதுண்டோ
இடும்பனே?
காலில் பிறப்பதுண்டோ
கழுதையே?
எல்லாம் பொய்யடா புளுகடா
போக்கிலியே" என்று
குறிஞ்சித்திடல்
திட்டுத் திட்டாய்த் திட்டி
வருணாசிரமத்தின்
மூலத்தில் வெடி வைத்த
புரட்சிக் கவியின்
ஈரோட்டுத் தண்டையென்னும்
பகுத்தறிவு ஆயுத்தால்
கூறுபோட்ட ஆவேசத்தை
தமிழா நீ தொடருவது
எப்போது?

சொல்லடா தமிழா...
யாராடா நீ?

"இப்புவி மக்களைப்
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
´என்குலம்´ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவி விரிவுசெய்; அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு"
என்கிறானே புரட்சிக் கவி...

சொல்லடா தமிழா...
யாராடா நீ?

தேசிய இருட்டறைக்குள் 
பங்கம் விளையா...
வீணர்கள் வசனம் பேசுகிறாய்!
மானிடப்பரப்பை குறுகிய பரப்பில்
அடைத்து சிதைத்த...
ஆரிய மூர்க்கத் தந்திரம் பார்த்து
சூது வாது அறியாதென...
ஒதுங்கிச் சென்று தேசிய மொழியின்
அநீதியை அங்கீகரித்து...
வன்முறையை அரசியல் என்கிறாய்!

சொல்லடா தமிழா...
யாராடா நீ? 


நன்றி -தமிழச்சி
29.11.2009 

No comments:

Post a Comment