Monday, January 25, 2010

இத்தாலியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு விடுதலைப்புலிகள் பெயரில் வெடிகுண்டு பார்சல்

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு விடுதலைப்புலிகளின் பெயரில் ஐஇடி எனப்படும் வெடி பொருள் பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பார்சல் ஜனவரி 20ம் தேதி தூதரகத்திற்கு வந்ததாகவும், அதன் அனுப்புநர் பெயரில் விடுதலைப் புலிகள் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தூதர் ஆரிப் கான் கூறியுள்ளார்.
அந்த பார்சலில் 2 பியூஸ் வயர்களும் இடம் பெற்றிருந்ததாம். இதுகுறித்து பொலிஸாஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பார்சலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூதரகத்திற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் பெயரைப் பயன்படுத்தி யாரோ சில விஷமிகள் இதை அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காலம் பதில் சொல்லும்

No comments:

Post a Comment