Thursday, December 3, 2009
உருவாக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ?
சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் உருவாக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்
ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் டி.எம்.ஜெயரட்ன,மைத்திரிபால ஸ்ரீசேனா,ஏ.எச்.எம்.பௌசி,பவித்திரா வன்னியராட்சி,அனுர பிரியதர்சன யாப்பா போன்றவர்களுக்கும் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் ஐக்கிய தேசிய முன்னணி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ராஜபக்ச சகோதரர்களின் குடும்ப அரசியல் காரணமாக சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இவர்களும் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment