Thursday, November 26, 2009
தமிழீழ விடுதலைப் புலிகலின் சிறப்புச்செய்திகள்
சிறப்புச்செய்திகள்
சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பெயரில் செயற்படும் இவர்கள் குறித்தும் இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறித்தும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
20-11-09
அன்புள்ள ஊடக ஆசிரியருக்கு
எமது இயக்கத்தின் அம்பாறை மாவட்டத் தளபதியாக திரு.ராம் அவர்கள் செயற்பட்டு வந்தாரென்பது நீங்கள் அறிந்ததே. அண்மைக் காலத்தில் அவரும் வேறு சில தளபதிகளும் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் தற்போது இராணுவத்தின் பிடிக்குள் இருந்துகொண்டு சிறிலங்கா அரசின் திட்டத்திற்கு அமைவாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதியும் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் துணைத் தளபதியாகவும் இருந்த நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான தவேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்த நிலையில் ஊடகங்களை நிர்வகிக்கும் எமது அன்பானவர்களிடம் நாம் வேண்டுகோள் ஒன்றை விடுகின்றோம்.எமது செயற்குழு சார்பில் வெளிவரும் அறிவித்தல்களையும், அறிக்கைகளையும் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வெளியீடுகளாகக் கருதிக்கொள்ள வேண்டும் எனவும், இது தவிர்ந்த வேறு வழிகளில் வரும் வெளியீடுகள் எமது வெளியீடுகளாகக் கருதி குழப்பமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
எமது அறிக்கைகள் வழமைபோல் தலைமைச் செயலகத்தின் ஊடகப்பிரிவினரிடம் இருந்து வெளிவரும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
நன்றி
”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment