Saturday, July 30, 2011

ஏழுமலை பாலிடெக்னிக்கா? கொலைவெறி கூடமா ?

ஆசிரியர் அடித்ததில் மாணவர் சாவு!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவிழுப்புரம்: புதுவை பாரதிபுரம், சுப்பிரமணியசிவா நகரை சேர்ந்த தர்மராஜன் மகன் பிரபாகரன் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரியில் ஆட்டோ மொபைல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.  இன்று காலை அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். ஆசிரியர் குணசேகரன் (24) பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாடம் சம்பந்தமாக பிரபாகரனிடம் ஆசிரியர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் பதில் கூறாததால் ஆசிரியர் குணசேகரன் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பிரபாகரன் மயங்கி விழுந்த நிலையில் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. 
அருகில் இருந்த சக மாணவர்கள் பிரபாகரனை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்லூரி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 விழுப்புரம் ஏடிஎஸ்பி பெருமாள், டிஎஸ்பி சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். மேலும்  ஆர்டிஓ பிரியாவும் வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தி உங்கள் கோரிக்கைகளை எழுதிக்கொடுங்கள் அது ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருச்சி சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய பு.மா.இ.மு தோழர்கள் கைதுசெயப்பட்டு   பதினைந்து  நாள் காவலில் அடைப்பு.
 விழுப்புரம் தமிழ் இளைஞர்  கூட்டமைப்பு மாணவர்களுக்கு ஆதரவாக நகரம்மெங்கும்  சுவரொட்டி ஒட்டி உள்ளனர்  இதனால் போராட்டம் மேலும் வலுக்கும் எனபடுகிறது .
03.08.20011 கல்லூரி மீண்டும் திறக்க போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்கள் .

Wednesday, July 20, 2011

கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை


சென்னை பாரீஸ் கார்னரில் ஹை கோர்ட் ஓரம், தி நகரில் நல்லி 100 அருகில், போத்தீஸ் எதிர் ரோடு என்று பாலியல் தொழிலாளிகளை சில இடங்களில் பார்த்ததுண்டு. சிவப்பு ,கருப்பு, மஞ்சள் என்று விதவிதமான சேலைகளில், அதிகப்படியான ஒப்பனைகளில் நின்று கொண்டு இருப்பார்கள். நான் சொல்வது 1996 அல்லது 98 என்று நினைக்கிறேன். அவர்களை பார்த்தவுடனே தெரிந்து விடும் இவர்கள் 'அப்படிப்பட்ட பெண்கள் (?)' என்று.

அவர்களை பார்த்தால் அப்படி ஒன்றும் வளமான வாழ்க்கை வாழ்பவர்களாகத் தெரியாது. வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டுபவர்களாத்தான் தெரியும். அங்கே நிற்பவர்கள் யாரும் தானாக தேடி இந்த தொழிலுக்கு வந்திருக்கமாட்டார்கள். சூழ்நிலை கைதிகளாய் வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்குண்டு, கரை ஒதுங்கி நிற்பவர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.

அப்படி ஒரு பாலியல் தொழிலாளியின் கதையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கிழக்கு பதிப்பத்தின் தயாரிப்பாக இந் நூல் வெளிவந்திருக்கிறது.

"கலைவாணி. ஒரு பாலியல் தொழிலாளியின் கதை"


ஒரு பெண் எங்கு தவறு செய்கிறாள், எப்படி பாலியல் தொழிலுக்கு தள்ளப் படுகிறாள்? என்பதை இப் புத்தகத்தை வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது.


இக் கதையில் (கதையல்ல நிஜம்!) வரும் கலைவாணியும் அப்படித்தான். எங்கெல்லாம் பிறர் மனம் கோணக் கூடாது என்று நினைக்கின்றாறோ அங்கெல்லாம் அவர் பெண்டாளப்படுகிறார். குடுப்பச் சூழலும் அவர் எடுக்கும் முடிவுகளும் அவரை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது என்று கதையின் போக்கோடு சென்று நாமும் தெரிந்துக் கொள்கிறோம்.

இப் புத்தகத்தை படிக்கப் படிக்க சென்னையின் விகாரமான மறுப்பக்கம் புரிகிறது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஒன்றுமே அறியாத கிராமத்து சிறுமியாக இருக்கும் கலைவாணி எப்படி ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக உருமாறுகிறார் என்பதை மிக யதார்த்த நடையில் கூறுகிறார் ஜோதி நரசிம்மன்.

'மகனின் மருத்துவ செலவுக்கு பணம் தருகிறேன் வா..'என்று, ஒருவன் பாரிமுணை அந்தோணியார் கோவிலுக்கு அருகில் இருந்து அவளை கூட்டிக் கொண்டு 'திருவேற்காடு' செல்கிறான். அங்கு அவரோடு பாலியல் தொடர்பு கொண்டுவிட்டு "இதோ... வீட்டில் போய் பணம் எடுத்து வருகிறேன் நீ பஸ் ஸடாண்டில் வைட் பண்ணு" என்று கூறிவிட்டு கம்பி நீட்டி விடுகிறான்.

பசிமயக்கம் காதை அடைக்க இரவு வரை காத்திருக்கும் கலைவாணியிடம் 3 ரூபாய் மட்டுமே இருக்கிறது. இரவு 9.30 மணிக்கு கடைசியாக கிளம்பும் வடபழனி பஸ்ஸும் கிளம்பத் தயாராகிறது, 'இதைவிட்டால் வேறு வழியில்லை' என்று துயரத்தோடு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற....


என்னிடம் இருந்த 3 ரூபாயை கண்டக்டரிடம் நீட்டினேன்

'ஒரு வடபழனி' மெல்லிய குரலில் சொன்னேன்.

'வடபழனி அஞ்சு ரூபாம்மா.'

'எங்கிட்ட வேற காசு இல்ல சார். சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தேன். அவுங்க எல்லோரும் வெளியூர் போயிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல...'

கண்டக்டரின் முகத்தைப் பார்க்கக் கூடத் திராணியில்லாமல், அழுகிற குரலில் சொன்னேன். அவர் என்ன நினைத்தாரோ, சட்டென்று டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துவிட்டார். வேறு ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

'என்னை அந்தோணியார் கோயிலுக்கு அருகே பார்த்தபோதே, என் உடம்பு வேண்டும் என்று இவன் சொல்லியிருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்' என்று தான் ஏமாற்றப் பட்டதை மனக் குமுறலொடு நம்மிடம் கொட்டுகிறார்.

'ஆண்களின் உலகம் விசித்திரமான உலகமாக இருக்கிறது. யார் நல்லவன், எவன் கெட்டவன் என்று கண்டுகொள்வது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒருவன் அழைத்துவந்து ஏமாற்றுகிறான், ஒருவன் என் துயரம் சூழ்ந்த முகம் பார்த்து உதவி செய்கிறான்'

இப்படி ஆங்காங்கே கலைவாணியின் அனுபவ நடை; நடைமுறை வாழ்க்கையின் பொய் முகத்தை நம் முன் படம் போட்டு காட்டுகிறது.

இந்த பெண்கள் எங்கேதான் பாதைமாறுகிறார்கள்?

பாலியல் தொழில் செய்யும் பெரும்பாண்மையான பெண்கள், 'காதல்' என்ற சாலையில் பயணம் செய்யும் போதுதான் வழி தவறிவிடுகிறார்கள். அந்த பயணம் அவர்கள் வாழ்வையே சீரழித்துவிடுகிறது. சில சமையங்களில் வாழ்வின் இக்கட்டான சுழ்நிலைகளில் அவர்கள் எடுக்கும் முடிவும் (தவறான) அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடுகிறது. அந்த கிணறு முழுவதும் வக்கிர புத்திக் கொண்ட, பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்?.