ஆசிரியர் அடித்ததில் மாணவர் சாவு!
விழுப்புரம்: புதுவை பாரதிபுரம், சுப்பிரமணியசிவா நகரை சேர்ந்த தர்மராஜன் மகன் பிரபாகரன் (17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஏழுமலை தொழில்நுட்ப கல்லூரியில் ஆட்டோ மொபைல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். ஆசிரியர் குணசேகரன் (24) பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பாடம் சம்பந்தமாக பிரபாகரனிடம் ஆசிரியர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் பதில் கூறாததால் ஆசிரியர் குணசேகரன் அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பிரபாகரன் மயங்கி விழுந்த நிலையில் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. அருகில் இருந்த சக மாணவர்கள் பிரபாகரனை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்லூரி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஏடிஎஸ்பி பெருமாள், டிஎஸ்பி சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். மேலும் ஆர்டிஓ பிரியாவும் வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தி உங்கள் கோரிக்கைகளை எழுதிக்கொடுங்கள் அது ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருச்சி சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் தமிழ் இளைஞர் கூட்டமைப்பு மாணவர்களுக்கு ஆதரவாக நகரம்மெங்கும் சுவரொட்டி ஒட்டி உள்ளனர் இதனால் போராட்டம் மேலும் வலுக்கும் எனபடுகிறது .
03.08.20011 கல்லூரி மீண்டும் திறக்க போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்கள் .


No comments:
Post a Comment