Saturday, June 5, 2010

கொழும்பு படவிழாவில் கலந்து கொண்டதால் சென்னையில் 4 தியேட்டர்களிலிருந்து ஹிருத்திக்ரோசனின் படம் தூக்கப்பட்டுள்ளது.



இந்தி நடிகர் ஹிருத்திக்ரோஷன் படத்துக்கு, தமிழ் திரையுலகம் தடை விதித்திருக்கிறது. அவர் நடித்த இந்தி படம் சென்னையில் 4 தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டது.   இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது.

 இந்த படவிழாவை தென் இந்திய திரையுலகம் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தது. தென் இந்தியாவை சேர்ந்த எந்த நடிகர், நடிகையும், திரையுலக பிரமுகர்களும் இலங்கை படவிழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தென் இந்திய திரையுலகம் தடை விதித்தது.

 ஹிருத்திக்ரோஷன் உள்பட சில இந்தி நடிகர்கள் மட்டும் இலங்கை படவிழாவில் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு தென் இந்திய திரையுலகம் தடை விதித்திருக்கிறது.

 ஹிருத்திக்ரோஷன் நடித்த  கயிட்ஸ்' என்ற இந்தி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படம் சென்னையில் உள்ள ஈகா, சத்யம், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தது.

 ஹிருத்திக்ரோஷன், தென் இந்திய திரையுலகம் விதித்த தடையை மீறி இலங்கை படவிழாவில் கலந்து கொண்டதால், அவர் நடித்த  கயிட்ஸ்' படத்தை திரையிடக்கூடாது என்று  நாம் தமிழர் இயக்கம்' எதிர்ப்பு தெரிவித்தது.

 அதைத்தொடர்ந்து 4 தியேட்டர்களில் இருந்தும் அந்த படத்தை தூக்கிவிட்டார்கள்.
தமிழராய் ஒன்றினைவோம்!  பகைவரை வென்றெடுப்போம்!!

No comments:

Post a Comment